Candidates are not allowed to hold a motorcycle rally for 72 hours
பெரம்பலூர் மாவட்ட தேர்தல் அலுவலர், கலெக்டருமான வெங்கடபிரியா விடுத்துள்ள அறிவிப்பு:
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் – 2021 எதிர்வரும் 06.04.2021 அன்று நடைபெற உள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் – 2021 நாளான 06.04.2021 மற்றும் அதற்கு 72 மணி நேரத்திற்கு முன்னதாக உள்ள காலங்களில் இரு சக்கர மோட்டார் வாகன பேரணி நடத்தி, அதன்மூலம் வாக்குச் சேகரிக்க இந்திய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
எனவே, பெரம்பலூர் மாவட்டத்தில் சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெறும் 06.04.2021 நாளிலிருந்து 72 மணி நேரத்திற்கு முன்னதாக, அதாவது 03.04.2021 மாலை 07.00 மணியிலிருந்து 07.04.2021 காலை 07.00 மணி வரை அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகள், மாநில கட்சிகள், பதிவு செய்யப்பட்ட கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் ஆகியோர் இரு சக்கர மோட்டார் வாகன பேரணி நடத்திட அனுமதி இல்லை என தெரிவித்துள்ளார்.