Car-bike-lorry collision kills 3; 3 injured: Trichy-Chennai National Highway accident near Perambalur!
பெரம்பலூர் அருகே இன்று மதியம் ஏற்பட்ட விபத்தில், கார் ஒன்று பைக் மீது மோதிவிட்டு, நின்று கொண்டிருந்த சம்பவத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சென்னை அய்யப்பன்தாங்கலை சேர்ந்த சிதம்பரம் மகன் பார்வதிநாதன் (37). இன்று காலை சென்னையில் இருந்து, சொந்த ஊரான காரைக்குடியில் நடக்கும் திருவிழாவிற்காக மாருதி ஆல்டோ காரில் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்தார். காரில், அவரது தாயார் வசந்தா (62) அவரது மனைவி தெய்வானை (33) , அவரது மகன் சேதுராம் (5) மற்றும் பார்வதிநாதனின் அண்ணன் சேதுராமன் (43), ஆகிய 5 பேரும் காரில் வந்தனர்.
கார், திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூர் அருகே தண்ணீர்பந்தல் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது, முன்னாள் சென்று கொண்டிருந்த, பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த கதிர்வேல் (71) என்ற பைக் மீது மோதியது, இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தாக அங்கே, சென்னையில் இருந்து அரியலூருக்கு சோப் லோடு ஏற்றிக் கொண்டு செல்வதற்காக நின்றுக் கொண்டிருந்த லாரி மீது மோதியது.
இதில் சம்பவ இடத்திலேயே காரை ஓட்டி வந்த பார்வதிநாதன், வசந்தா, பைக்கில் வந்த கதிர்வேல் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். சேதுராமன், சேதுராம், தெய்வாணை மற்றும் ஆகிய 3 பேரும் படுகாயமடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்டு, பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், பலியானவர்களின் உடலல்களை உடற்கூறு ஆய்விற்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் கிடத்தி உள்ளனர்.
பட்டப்பகலில் விபத்தில் 3 பேர் பலியான அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வழக்குப் பதிவு செய்த போலீசார், சாலையின் ஓரம் லாரியை நிறுத்திய டிரைவர் திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள தாளக்குடியை சேர்ந்த அங்கமுத்து மகன் சண்முகம் (41) என்பவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.