Chennai, Kanchipuram MRF workers’ benefits, action available to Perambalur: A.Raja MP!

பெரம்பலூர் மாவட்டம், நாரணமங்கலம், எம்.ஆர்.எஃப் டயர் தொழிற்சாலையில் தொ.மு.ச. கொடியேற்றி, கல்வெட்டு திறந்து வைத்து ஆ.இராசா. எம்.பி -அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் சிறப்புரையாற்றினர்! மாவட்ட செயலாளர் குன்னம் சி.இராஜேந்திரன் – எம்.எல்.ஏ. பிரபாகரன் கலந்து கொண்டனர்!

பெரம்பலூர் மாவட்டம், நாரணமங்கலம் கிராமத்தில் எம்.ஆர்.எஃப்.தனியார் டயர் தொழிற்சாலையில் இன்று தொ.மு.ச.கொடியேற்றி, புதிய பெயர்ப்பலகை திறப்பு விழா நடைபெற்றது.

ஆலத்தூர் மேற்கு ஒன்றியம், நாரணமங்கலம் ஊராட்சியில் உள்ள எம்.ஆர்.எஃப். தனியார் டயர் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் தொ.மு.ச.கொடியேற்றி, புதிய பெயர்ப்பலகை திறப்பு விழா மற்றும் புதிய கல்வெட்டு திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. எம்.ஆர்.எஃப். தொழிற்சங்க தலைவர் எம்.ராஜகாந்தம், எம்.ஆர்.எஃப். தொழிற்சங்க துணை தலைவர் ஆர்.ரெங்கசாமி வரவேற்புரையாற்றினார்கள். ஆலத்தூர் ஒன்றிய பெருந்தலைவரும் -ஆலத்தூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளருமான என்.கிருஷ்ணமூர்த்தி, ஆலத்தூர் மேற்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் சோமு.மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில், கழக துணை பொதுச்செயலாளர் ஆ.இராசா. எம்.பி.கலந்து கொண்டு தொ.மு.ச. கொடியேற்றி, புதிய கல்வெட்டை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். இதில் மாவட்ட கழக செயலாளரும் -மாவட்ட ஊராட்சி குழு தவைவருமான குன்னம் சி.இராஜேந்திரன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் ஆகியோர் வாழ்த்துரையாற்றினார்கள்.

அப்போது ஆ.ராசா எம்.பி. பேசியதாவது:

பின்தங்கிய மாவட்டமான, பெரம்பலூர் மாவட்டத்தில், பொருளாதாரம், வேலைவாய்ப்புகள், அதிகரிக்கவே எம்.ஆர்.எஃப் தனியார் டயர் தொழிற்சாலை கொண்டுவரப்பட்டது. இதனால், கட்டுமானம், போக்குவரத்து உள்ளிட்ட வணிகம் வளம் பெறும் என்ற நோக்கிலே கொண்டுவரப்பட்டது. இங்கு பேசியவர்களின் கருத்துகளை பார்க்கும் போது, அது எட்டவில்லை என தெரியவருகிறது. தொழிலாளர்களுக்கும், சென்னை, காஞ்சிபுரத்தில் உள்ள எம்.ஆர்.எஃப் டயர் தொழிற்சாலைகளில் வழங்கப்படும் சலுகைகள், வசதிகள், ஊக்கத் தொகைகள் கிடைக்க நடவடிக்கை முயற்சி செய்யப்படும். தொழிலாளர்களின் தோழன் கம்யூனிஸ்ட்கள் என்ற நிலையை மாற்றி, இங்கு திராவிட கட்சி முதன் முதறையாக தொழிற்சங்கம் ஆரம்பித்துள்ளது பாராட்டுக்குரியது. தலைவர் கலைஞர் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட இத்திட்டம் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் முன்னெடுக்கப்படும் என்றும், அதற்காக சென்னை மட்டுமில்லாமல், டெல்லி வரை கூட செல்வோம் என்றும் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என்.ராஜேந்திரன், கழக கொள்கை பரப்பு துணை செயலாளர் ச.அ. பெருநற்கிள்ளி, மாநில நிர்வாகிகள் பா.துரைசாமி, டாக்டர் செ.வல்லபன், வி.எஸ்.பெரியசாமி, மாவட்ட அவைத்தலைவர் அ.நடராஜன், மாவட்ட துணை செயலாளர் தழுதாழை பாஸ்கர், நூருல்ஹிதா இஸ்மாயில், மாவட்ட பொருளாளர் செ.இரவிச்சந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ம.ராஜ்குமார், பொறியாளர் ப.பரமேஷ்குமார், பெரம்பலூர் ஒன்றிய கழக செயலாளர் எஸ்.அண்ணாதுரை, வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், வேப்பந்தட்டை மேற்கு ஒன்றிய கழக செயலாளர் எஸ்.நல்லதம்பி, வேப்பூர் தெற்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் சி.ராஜேந்திரன், வேப்பூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் தி.மதியழகன், நாரணமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர்
பத்மாவதிசந்திரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் து.ஹரிபாஸ்கர், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால், தொ.மு.ச.மாவட்ட கவுண்சில் தலைவர் கே.கே.எம்.குமார், ஆலத்தூர் மேற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் இரா.அருண், தொ.மு.ச.மாவட்ட கவுண்சில் துணை செயலாளர் மு.சி.செல்வராஜ், தொ.மு.ச.மாவட்ட கவுண்சில் துணை தலைவர் எம்.குள்ளபெத்தான், தொ.மு.ச.மாவட்ட கவுண்சில் பொருளாளர் பி.வேணுகோபால் மற்றும் அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், ஒன்றிய,நகர,பேரூர் கழக நிர்வாகிகள், கழக முன்னோடிகள் மற்றும் எம்.ஆர்.எஃப். தொழிற்சங்க துணை தலைவர் டி.செல்லத்துரை, செயலாளர் வி.கார்த்திக், இணைச்செயலாளர்கள் ஆர்.கணேசன், எஸ்.ஜான்பிரிட்டோ, பொருளாளர் பி.செந்தில் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!