Chief Minister’s Corona Relief Fund: First installment of Rs. 2 thousand; Perambalur MLA, M. Prabhakaran started.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்த கொரோனா பாதிப்பு நிவாரண நிதி முதல் தவணையாக 1.8 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு, ரூ.36.55 கோடி நிதி வழங்கும் நிகழ்ச்சி, பெரம்பலூர் கலெக்டர் ஆபீசில் கலெக்டர் வெங்கட பிரியா தலைமையில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட பெரம்பலூர் எம்.எல்.ஏ.. எம். பிரபாகரன் பேசியதாவது:

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் , முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன் தமிழக மக்களின் வாழ்வில் புதிய ஏற்றத்தினை உருவாக்கும் வகையிலும், தேர்தல் காலங்களில் தான் அளித்த வாக்குறுதியினை நிறைவேற்றும் வகையில் முதல் அறிவிப்பாக குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம் வழங்கிட அரசாணை வெளியிட்டு, அதன் முதல் தவணையாக ரூ.2 ஆயிரத்தினை உடனடியாக வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் தற்போது அதிகரித்து வரும் நிலையில் தமிழக மக்களின் இன்னல்கள் மற்றும் துன்பங்களை போக்குவதற்கும், கொரோனா நோய்த் தடுப்பு காலங்களில் ஏற்பட்ட வருவாய் இழப்பினை ஈடு செய்து, அவர்களது வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையிலும், தங்களது அடிப்படை, அத்தியாவசிய தேவைகளுக்கு பிறரைச் சார்ந்திருக்காமல், தங்களது தேவைகளை தானே நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டும், அரிசி பெறும் குடும்ப அட்டை வைத்துள்ளவர்களுக்கு ரூ.4,000- வழங்கிடவும், அதன் முதன் தவணையாக ரூ.2,000- வழங்க தமிழக அரசால் உத்தரவிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மொத்தம் 1,82,758 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2,000- வீதம் ரூ.36.55 கோடி மதிப்பிலான நிதி உதவி வழங்கப்பட உள்ளது. இதன்மூலம் குடும்ப அட்டைதாரர்கள் தங்களது உடனடி மற்றும் அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்ய தமிழக அரசால் வாய்ப்பு ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் டி.ஆர்.ஓ. ராஜேந்திரன், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் தசெல்வகுமரன், மாவட்ட வழங்கல் அலுவலர் சங்கர், பொது விநியோகத் திட்ட துணை பதிவாளர் செல்வராஜ், துணை பதிவாளர் பாண்டிதுரை உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும், பொதுக் குழு உறுப்பினர் ஜெகதீஸ்வரன், திமுக மாவட்ட பொருளாளர் ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் மதியழகன், ஜெகதீசன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!