Children’s Day: Students Rakhy wear to Perambalur Collector
மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் உதவியுடன் சைல்டு லைன் திட்டம் பெரம்பலூர் மாவட்டத்தில் தனியார் தொண்டு நிறுவனம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த அமைப்பின் மூலமாக குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நவம்பர் 14 முதல் நவம்பர் 20 வரை சைல்டு லைன் திட்டம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இன்று புதிய பேருந்து நிலையத்தில் பெரம்பலூர் முத்துநகர் ஆரம்பப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா கையில் ராக்கி அணிவித்தார். பின்னர், மாணவர்கள் ஆட்சியருக்கு ராக்கி அணிவித்தனர். அப்போது மாவட்ட ஆட்சியர் அனைத்து குழந்தைகளுக்கும் குழந்தைகள் தின விழா வாழ்த்துக்களை தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து “நம்மால் முடியும், குழந்தை திருமணத்தை நிறுத்த…” என்ற விழிப்புணர்வு கையெழுத்து பலகையில் மாவட்ட ஆட்சியர் கையெழுத்திட்டு, விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்.
குழந்தை திருமணத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும் வெளியிட்டார். மேலும் குழந்தைகளின் பிரச்சனைகள் தொடர்பாக 1098 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் குழந்தைகளுக்கும் பொதுமக்களுக்கும் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.