chronic stomach pain, the college student suicide at arumbavoor in Perambalur Dt
பெரம்பலூர் அருகே தீராத வயிற்றுவலியால் கல்லூரி மாணவி தற்கொலை
பெரம்பலூர் மாவட்டம், அரும்பாவூர் அருகே உள்ள தழுதாழை கிராமத்தை சேர்ந்தவர் கண்ணையன் மகள் விஜயலெட்சுமி(வயது17). இவர் வேப்பந்தட்டை அரசு கலை கல்லூரியில் கம்யூட்டர் சயின்ஸ் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்நிலையில் விஜயலெட்சுமிக்கு கடந்த சில மாதங்களாக தீராத வயிற்றுவலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இன்று விடுமுறை என்பதால் வீட்டிலிருந்த விஜயலெட்சுமிக்கு வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்து வீட்டில் ஆள் யாரும் இல்லாத போது மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
வயலுக்கு சென்ற கண்ணையன் வீட்டிற்கு வந்த போது மகள் விஜயலட்சுமி தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்த தகவலறிந்த அரும்பாவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விஜயலட்சுமியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுகாக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் இது குறித்து அரும்பாவூர் காவல் நிலையத்தினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.