CITU union petitions collector to provide safety equipment to Perambalur municipal Workers
பெரம்பலூh; நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா காலத்தில் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியருக்கு கொடுக்கப்ட்ட மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதில் தெரிவித்துள்ளதாவது:
பெரம்பலூர் நகராட்சியில் 21 வார்டுகளாக பிரிக்கப்பட்டு இதில் தூய்மைப் பணியாளர்களாக ஒப்பந்த அடிப்படையில் சுமார் 250 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். தற்போது கொரோனா நோய்த் தொற்று இரண்டாம் அலையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இந்நிலையில் பெரம்பலூர் நகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு நகராட்சி சார்பில் எந்தவொரு பாதுகாப்பு உபகரணங்களும் இதுவரை வழங்கப்படாததால் கை உறையின்றி தடை செய்யப்பட்ட பகுதிகள் உள்பட குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுத்து தூய்மைப் பணியாளர்களுக்கு கொரோனா கால பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கி நோய்த் தொற்றிலிருந்து பாதுகாக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.