பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் முதலமைச்சர் கோப்பைக்கான மண்டல அளவிலான கபாடி போட்டிகள் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக வரும் 15.02.2016 முதல் 17.02.2016 வரை பெரம்பலூர் மாவட்ட விளையாட்டரங்கத்தில் நடைபெறுகிறது. இப்போட்டிகள் பெரம்பலூர், திருச்சி, திருவாரூர், நாகை, திண்டுக்கல், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ஆகிய எட்டு மாவட்டங்களை உள்ளடக்கியதாகும். ஏற்கனவே அந்தந்த மாவட்டங்களில் முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிகள் நடத்தப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர் மற்றம் வீராங்கனைகள் இந்த மண்டல அளவிளான போட்டிகளில் கலந்து கொள்வார்கள். Knock Out – Cum – League முறையில் இப்போட்டிகள் நடத்தப்படும்.
இப்போட்டிகளில் வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு முதல் பரிசாக தலா ரூ.5,000- ம் வீதம் அணிக்கு ரூ.60,000-மும், இரண்டாம் பரிசாக தலா ரூ.3000- வீதம் அணிக்கு ரூ.36,000-மும், மூன்றாம் பரிசாக தலா ரூ.2000- வீதம் அணிக்கு ரூ.24,000- மும், வழங்கப்படும்.
மேலும், முதல் இரண்டு இடங்களில் வெற்றி பெற்ற மாவட்ட அணிகள் மாநில அளவிலான மண்டலங்களுக்கு இடையேயான போட்டிகளில் கலந்து கொள்ள தகுதி பெறுவார்கள் எனவும், மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு முதல் பரிசாக தலா ரூ.1 லட்சம்- வீதம் அணிக்கு ரூ.12,லட்சம், இரண்டாம் பரிசாக தலா ரூ.50,000- வீதம் அணிக்கு ரூ.6லட்சமும், மூன்றாம் பரிசாக தலா ரூ.25 ஆயிரமும்- வீதம் அணிக்கு ரூ.3 லட்சமும், வழங்கப்படும்.
என மாவட்ட ஆட்சியர் அதில் தெரிவித்துள்ளார்.