CM Edappadi K. Palanisamy opens Perambalur taluka office through video conferencing.

பெரம்பலூர் ஆத்தூர் ரோட்டில், ரூ.2 கோடியே 53 இலட்சத்து 63 ஆயிரம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட பெரம்பலூர் தாலுகா அலுவலக கட்டிடத்தை, சென்னை தலைமை செயலகத்திலிருந்து கானொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா, எம்.எல்.ஏக்கள் ஆர்.டி..இராமச்சந்திரன், தமிழ்ச்செல்வன் ஆகியோருடன் நேரில் சென்று குத்து விளக்கு ஏற்றிவைத்து பார்வையிட்ட பின்னர், அங்கிருந்தவர்களுக்கு, இனிப்புகளை வழங்கி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.

திறந்து வைக்கப்பட்ட தாலுகா அலுவலகத்தின், கட்டிடம் தரைதளம் மற்றும் முதல்தளம் என இரண்டு தளங்கள் 13,471.52 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. தரைதளம் 7123.12 சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ளது. இத்தளத்தில் வரவேற்பு அறை, வருவாய் வட்டாட்சியர் அறை, வருவாய் வட்டாட்சியர் அலுவலக அறை, நில அளவைகள் அறை, கணினி அறை, பதிவு அறை, ஆண்கள், பெண்களுக்கென தனித்தனி கழிப்பறைகள், மற்றும் ஊனமுற்றோர்களுக்கான கழிப்பறைகள் உள்ளிட்ட அறைகளும் உள்ளன.

மேலும், முதல்தளம் 6348.40 சதுர அடியில் கட்டப்பட்டுள்ளது. இத்தளத்தில் வட்டாட்சியர் (வட்ட வழங்கல் அலுவலர்) அறை, அலுவலக அறை, கூட்ட அரங்கம், வட்டாட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம் மற்றும் நலதிட்ட அலுவலர்) அறைகள், பதிவு அறை, எழுது பொருள் வைப்பு அறை, ஆண்கள், பெண்களுக்கென தனித்தனி கழிப்பறைகள் உள்ளிட்ட அறைகளுடன் அமைந்துள்ளது. இந்நிகழ்ச்சியில் டி.ஆர்.ஓ சி.ராஜேந்திரன், ஆர்.டி.ஓ. சக்திவேல், பெரம்பலூர் தாசில்தார் அருளானந்தம், உள்ளிட்ட வருவாய்துறை பணியார்கள் பலர் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!