Co operative Credit Union amount of crop loan insurance provided kunnam R.T. Ramachandiran MLA.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் சிறுகுடல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சஙக உறுப்பினர் சு.சின;னசாமி என்பவர் பயிர்கடன் பெற்றிருந்தார்.
பயிர்க் கடனுக்கான இன்சூரன்ஸ் இப்கோ – டோக்கியோ பொது காப்பீட்டு நிறுவனததில் சிறுகுடல் கூட்டுறவு சங்கத்தின் மூலம் செய்யப்பட்டிருந்தது. தற்போது அவர் மரணமடைந்து விட்ட காரணத்தால் அவர் செய்திருந்த காப்பீட்டு தொகைக்கு பெற வேண்டிய ரூபாய் இரண்டு லட்சத்து 50 ஆயிரம் சங்கத்தின் மூலம் பெறப்பட்டு நேற்று பெரம்பலூர் கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளர் அலுவலகத்தில் அதற்கான காசோலையினை அவரது மனைவி சி.நல்லம்மாளிடம் குன்னம் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.ராமச்சந்திரன் வழங்கினார்.
சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் மா.சந்திரகாசி ஆகியோர் மண்டல இணைப்பதிவாளார் வெ.பெரியசாமி, சரக துணைப் பதிவாளர் ந.ராமலிங்கம், சிறுகுடல் கூட்டுறவு கடன் சங்க தலைவர் பி.நாகராஜன் கூட்டுறவு சார்பதிவாளர்கள் த.அறப்பளி, மணிமேகலை மற்றும் இப்கோ-டோக்கியோ பொது காப்பீட்டு நிறுவன முதன்மை மேலாளர் சிறுகுடல் கூட்டுறவு கடன் சங்க செயலாளர், அழகுவேல் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.