Community Baby Shower at the ceremony held near in veppur

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் சார்பாக பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் வட்டாரத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 160 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா இன்று ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது.

இந்த சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற கர்ப்பிணி பெண்களுக்கு உடல் நல பரிசோதனை, அல்ட்ரா ஸ்கேன் இரத்தப்பரிசோதனை, உயரம், எடை ஆகியவை கண்டறியப்பட்டது. மேலும் கர்பகாலத்தில் 10 கிலோ எடை கூடுதல், சரிவிகித உணவு எடுத்துக்கொள்ளுதல், தாய்பாலின் அவசியம், மருத்துவமனை பிரசவம், சீம்பாலின் அவசியம், மற்றும் இணை உணவு குறித்து மருத்துவ அலுவலரால் விளக்கம் அளிக்கப்பட்டது.

இவ்விழாவில் பங்கேற்ற உள்ள கர்ப்பிணி பெண்களுக்கு ஐந்து வகை உணவு, கர்ப்பகால பராமரிப்பு, தாய்ப்பாலின் அவசியம், இணை உணவு, மருத்துவ மனையின் தொலைபேசி எண்கள், குழந்தைகளின் எடை விபரங்கள் அடங்கிய கையேடு வளைகாப்பில் பங்கேற்ற அனைத்து கர்ப்பிணி பெண்களுக்கும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மகளிர் திட்ட இயக்குநர் உமாமஹேஸ்வரி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் பூங்கொடி, குழந்தை பாதுகாப்பு அலகின் திட்ட அலுவலர் அருள்செல்வி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மோகன், செந்தில், வட்டார மருத்துவ அலுவலர் சேசு, வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் பிரேமஜெயம் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!