Complaint Center: Perambalur Collector to stop selling fertilizer at a price higher than the price fixed by the government!
மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டத்திற்கும் உர விநியோக திட்ட வேளாண்மை இயக்குநரால் ஒவ்வொரு மாதமும் நிர்ணயிக்கப்பட்டு, அதன்படி உரங்கள் உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்டு சில்லரை உர விற்பனை நிலையங்கள் மூலம் மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைப்படி நேரடியாக பயன்பெறும் மாற்று முறையில் விவசாயிகளுக்கு விற்பனை முனைய இயந்திரம் மூலம் விவசாயிகளின் ஆதார் எண் பெறப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது,
எனவே, உர விற்பனை நிலையங்களில் உரங்கள் விற்பனை மேற்கொள்ளப்படும் போது உரக்கட்டுப்பாட்டு சட்டம் 1985-க்கு புறம்பாக விற்பனை செய்தல் மற்றும் அரசு நிர்ணயம் செய்த விலையை விட கூடுதலாக விற்பனை செய்தல் முதலியவற்றை கண்காணித்திட மாவட்ட அளவில் புகார் மையம் (District Monitoring Cell) அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், 45 கிலோ கிராம் கொண்ட யூரியா ஒரு மூட்டை ரூ.266.50-ம், 50 கிலோ கிராம் கொண்ட DAP ஒரு மூட்டை ரூ.1200-ம் மற்றும் 50 கிலோ கிராம் கொண்ட மியூரட் ஆப் பொட்டாஷ் (MOP) ரூ.1015 அரசு நிர்ணயம் செய்த விலையாகும்.
எனவே, மாவட்ட மற்றும் வட்டார அளவில் உரங்கள் விற்பனை குறித்த புகார்களை தெரிவித்திட 94870 73705 (வேளாண்மை உதவி இயக்குநர் தரக்கட்டுப்பாடு, பெரம்பலூர்) மற்றும் 96777 99938 (வேளாண்மை அலுவலர் தரக்கட்டுப்பாடு, பெரம்பலூர்) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம், என மாவட்ட கலெக்டர் வெங்கடபிரியா தெரிவித்துள்ளார்.