பெரம்பலூர் அருகே துங்கபுரம் ஊராட்சியில் மரம் ஏலம் விட்டதில் முறைகேட்டை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியல் முயற்சித்தனர். காவல் துறையினர் அதிகாரிகள் பொதுமக்களிடம் நடவடிககை எடுக்க கால அவகாசம் கோரினர்
பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஒன்றியம், துங்கபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட ஆறு மாறான் ஏரியில் ஊராட்சி தீர்மானம் இன்றி தன் சகோதரருக்கு சுமார் ரூ 3 லட்சம் மதிப்புள்ள மரத்தை வெட்டுவதற்கு வாய் வார்த்தை மூலம் குத்தகைக்கு விட்ட ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்தும், அவரை கைது செய்ய வேண்டும் எனவும், அதற்கு உறுதுணையாக இருக்கும் வேப்பூர் ஒன்றிய அதிகாரிகளை கண்டித்தும் கிராம நிர்வாக அலுவலரையும், கிராம உதவியாளரையும் கண்டித்து சாலை மறியல் போராட்டம் இன்று ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தலைமையில் நடைபெறுவதாக நோட்டீஸ் அடித்து குன்னம் தாலுக்கா அலுவலகத்தில் மனு கொடுத்து இருந்தனர்.
இதை அறிந்த குன்னம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பு செல்வன் துங்கபுரம் ஊராட்டுமன்ற துணை தலைவரிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.
பேச்சுவார்த்தையில் மனு கொடுத்த உடன் நடவடிக்கை எடுத்து விட முடியாது. அதற்கு கால அவகாசம் தேவை. மேலும் சாலை மறியல் செய்ய சட்டப்படி முன் அனுமதி பெற வேண்டும். எனவே சாலை கைவிட வேண்டும் என கேட்டுக் கொண்டார்
மேலும் தாசில்தார் தலைமையில் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் என்று கூறியதன் பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது.