Construction work and sales of raw materials have slowed to a 20-year low; workers are out of work, and businessmen are struggling without business!
பெரம்பலூர் மாவட்டம் உள்பட தமிழ்நாட்டின் பல பகுதிகளில், கட்டுமான பொருட்கள் விலை ஏற்றத்தால் கட்டுமான நிறுவனங்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், சிமெண்ட், செங்கல், கம்பி, டைல்ஸ் விற்கும் வணிக நிறுவனங்களுக்கு தவித்து வருகின்றனர்.
தற்போது ஏற்பட்டுள்ள கட்டுமான பொருட்கள் விலை ஏற்றத்தால், வீடு கட்டும் மற்றும் கட்டிடங்களை கட்டுவோர்கள் கட்டுமானத்தை ஒத்தி வைத்தி உள்ளனர். இதனால், கட்டுமானத் தொழில் முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. கட்டுமானத் தொழிலை நம்பி இருக்கும் மூலப் பொருட்களை விற்கும் நிறுவனங்கள் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத வியாபார மந்த தன்மையை கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதத்தில் சநத்தித்து வருவதால் கடன் தவணைகள், கடை வாடகை, பணியாளர்கள் சம்பளம், உள்ளிட்ட பல இடர்பாடுகளை எதிர்நோக்குகின்றனர். பலர் வாங்கிய மூலப்பொருட்களுக்கு உரிய தொகையை செலுத்துவதில் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
எப்போதும் வழக்கமாக கட்டுமான தொழில் தீபாவளி பண்டிகை மற்றும் அக்டோபர் நவம்பர் மழை மாதங்களிலேயே மந்தமாக இருக்கும். ஆனால், கட்டுமானத்திற்காக தட்ப வெப்ப சூழ்நிலைகள் இருந்தும் மந்தமாகி உள்ளது. இதே நிலைமை ஓரிரு மாதங்கள் தொடர்ந்தால் குறைந்த வியாபாரங்களை கொண்டிருக்கும் நிறுவனங்கள் முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டு பலர் வேலை வாய்ப்பை இழக்க நேரிடும் என கட்டுமானத்துறை சேர்ந்த பலர் தெரிவிக்கின்றனர்.
வீடு கிரஹபிரவேசங்கள், பூமி பூஜைகள் எப்போதும், வைகாசி, ஆவணி, தை மாதங்களிலேயே அதிகளவில் நடக்கும், ஆனால், இந்த வழக்கும் போல் கூட இல்லாமல், மிக சொற்ப நடந்துள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு கூட ஜனவரி மாதத்தில் 8 விடுமுறை நாட்களில் அதிக வியாபாரம், பூமி பூஜைகள் நடந்தன. ஆனால், தற்போதைய 2025 ம் ஆண்டு சுமார் 16 நாட்கள் விடுமுறை இருந்தும் பின்னடைவையே சந்தித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதில், மத்திய, மாநில அரசுகள், பலரின் வாழ்வாதார பிரச்சனைகளை மனதில் கொண்டு கட்டுமான பொருட்களான மணல், ஜல்லி, சிமெண்ட் உள்ளிட்டவைகளுக்கு நியாமான விலை நிர்ணயம் செய்து, முடங்கி வரும் கட்டுமானத் தொழிலை தூக்கி நிறுத்த வேண்டும் கட்டுமான தொழிலாளர்கள், பொறியாளர்கள், வணிகர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.