Continuous power cut: Public road traffic near Perambalur demanding without break electricity
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே ஓலைப்பாடி கிராமத்தில் தொடர் மின்வெட்டை கண்டித்தும், தடையில்லா மின்சாரம் வழங்க கோரியும் 150க்கும் மேற்பட்டோர் திடீர் சாலை மறியல் போராட்டம்:
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள ஓலைப்பாடி கிராமத்தில் கடந்த 4 நாட்களாக தொடர் மின் வெட்டு ஏற்படுவதாகவும், அவ்வப்போது வரும் மின்சாரம் உடனடியாக நிறுத்தப்பட்டு விடுவதாகவும், தீபாவளி தினத்தன்று கூட மின்சாரம் இல்லாமல் போனதால் இருளில் தீபாவளி பண்டிகையை கொண்டாடியதாகவும், கூடுதல் டிரான்ஸ் பார்மர்களை அமைத்து முறையாக மின்சாரம் வழங்கிட வேண்டுமென பலமுறை மின் வாரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாததால் ஆத்திரமடைந்த ஓலைப்பாடி கிராம மக்கள் 150க்கும் மேற்பட்டோர் இன்று திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த குன்னம் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி போராட்டத்தைகைவிட செய்தனர்.
இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தால் வேப்பூரிலிருந்து வயலப்பாடி வழியாக அகரம்சீகூர் செல்லும் சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.