Corona 3rd wave: Awareness program in Perambalur

தமிழக அரசின் உத்தரவின்படி, பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் கொரோனா 3வது அலையினை கட்டுப்படுத்துவது குறித்து வாரம் முழுவதும் (01.08.2021 முதல் 07.08.2021) நடைபெறவுள்ள விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை கலெக்டர் வெங்கட பிரியா, பெரம்பலூர் எம்.எல்.ஏ எம்.பிரபாகரன், மாவட்ட ஊராட்சி சேர்மன் சி.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் தொடங்கி வைத்தார்.

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை மிக வேகமாக பரவி மக்களிடையே பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் இந்த இரண்டாம் அலை தாக்கத்தினை கட்டுப்படுத்த மாண்புமிகு தமிழக முதல்வரால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. கொரோனா நோயிலிருந்து அனைவரையும் பாதுகாக்கும் பொருட்டு 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இரண்டு தவணைகள் வழங்கப்பட்டு வருகிறது.

துண்டுபிரசுரம் மற்றும் கையேடுகள் விநியோகம்-சமூக ஊடகங்களில் கொரோனா பற்றிய விழிப்புணர்வு செய்திகளை பதிவிடல், உள்ளுர் தொலைக்காட்சியில் கொரோனா விழிப்புணர;வு பற்றி விளக்கமளித்தல் போன்ற நிகழ்ச்சிகளை ஒளிபரப்புதல், பெரிய அளவில் கை கழுவும் நிகழ்ச்சிகளை நடத்துதல், பேருந்து நிலையம், கடைவீதி போன்ற பொது இடங்களில் முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடித்தல் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், தொழில் முனைவோர் சங்க கூட்டங்களில் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்துதல், தனியார் மருத்துவமனை மற்றும் ஐ.எம்.ஏ நிதி உதவியுடன் விழிப்புணர்வு முகாம்களை நடத்துதல், நெடுஞ்சாலை பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சுங்கச் சாவடிகளில் விழிப்புணர்வு முகாம் நடத்துதல், சிறிய அளவிலான திரைப்பட போட்டிகள், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுர குடிநீர், அமுக்கரா மாத்திரைகளை சித்த மருத்துவத்துறையின் மூலம் வழங்குதல், வலைதளங்கள் மற்றும் நேரடியாக விளம்பர சுவரொட்டிகளின் வடிவமைப்பு, வலைதளங்களில் ஓவியப்போட்டி, ஸ்லோகங்கள் எழுதும் போட்டி, வினாடி வினா நிகழ்வுகளை நடத்தி பள்ளி மாணவர்களிடையே கொரோனா விழிப்புணர்வுகளை நடத்துதல், ரேடியோவில் கொரோனா பற்றிய செய்திகளை நாள் முழுவதும் ஒளிபரப்புதல். கொரோனா விழிப்புணர்வு பற்றிய செய்திகளை படத்துடன் எழுதுதல், கொரோனா விழிப்புணர்வு பற்றிய தெரு நாடகங்களை நடத்துதல், கிராமங்கள் ஊராட்சிகள் மற்றம் வார்டுகள் போன்ற இடங்களில் 100 சதவிகிதம் தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கான வசதியை மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ஏற்பாடு செய்தல் போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் இந்த வாரம் முழுவதும் மேற்கொள்ளப்படவுள்ளது என அப்போது கலெக்டர் தெரிவித்தார். கொரோனா விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டுபிரசுரங்கள், முகக்கவசங்கள் ஆகியவற்றை பொதுமக்களுக்கும், பயணிகளுக்கும் வழங்கி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

இந்நிகழ்வில் சுகாதார பணிகள் துணை இயக்குநர் கீதாராணி, நகராட்சி ஆணையாளர் குமரிமன்னன், சுகாதாரத்துறை மற்றும் நகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!