Corona relief fund for temple staff! Presented by Minister SS Sivasankar

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இந்து சமய அறநிலைத் துறையின் சார்பில் கோவில்களில் மாத ஊதியமின்றி பணிபுரியும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகள் மற்றும் பிற பணியாளர்களுக்கு கொரோனா பாதிப்பு நிவாரண நிதி ரூ.4 ஆயிரம் மற்றும் 10 கிலோ அரிசியுடன் 15 வகையான மளிகைப் பொருட்கள் என 241 நபர்களுக்கு ரூ.9.6 லட்சம் மதிப்பிலான நிதி உதவியை, பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா பெரம்பலூர் எம்.எல்.ஏ எம்.பிரபாகரன், மாவட்ட ஊராட்சித் தலைவர் சி.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் நேற்று மாலை வழங்கினார்.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் 203 படித்த ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு நிதியுதவி மற்றும் தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.57.0 லட்சம் மதிப்பிலான நிதியுதவியும், ரூ.79.35 லட்சம் மதிப்பிலான தாலிக்குத் தங்கத்தையும் என மொத்தம் 444 நபர்களுக்கு ரூ.1.46 கோடி மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளையும் அமைச்சர் வழங்கினார்.

முன்னதாக சேவா இன்டர்நேஷனல் மற்றும் ஸ்ரீஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில் பெரம்பலூர் அரசு மருத்துவமனை மற்றும் எசனை அரசு மருத்துவமனை ஆகிவற்றிற்கு ரூ.1.8 லட்சம் மதிப்பீட்டிலான இரண்டு ஆக்ஸிஜன் செறியூட்டிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலைத்துறை, மாவட்ட வருவாய் துறை, மாவட்ட சமூக நலத்துறை, அரசு மருத்துவர்கள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!