Corona vaccinate work in the district collector’s Start!

பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா, தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ முன்னிலையில் நேற்று தொடக்கி வைத்தார். அப்போது சுகாதார பணிகள் இணை இயக்குநர் கீதாராணி தடுப்பூசி போட்டுக் கொண்டார்.

முன்கள பணியாளர்களுக்கு முதற்கட்ட கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தினைநாட்டின் முதலாவது கெரோனா வைரஸ் தடுப்பூசி திட்டத்தை, தமிழ்நாடு முதலமைச்சர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தடுப்பூசி போடும் பணியினை தொடங்கி வைத்து பார்வையிட்டார்கள். தமிழகத்தில் 166 இடங்களில் கொரானா தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டு இதற்காக 1500 க்கும் மேற்பட்ட செவிலியர்கள் மற்றும் சுகாதாரத்துறையினர்கள் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு மத்திய சுகாதார அமைச்சகம் சார்பில் காணொளி வழியில் நடத்தப்பட்ட வழிகாட்டுதலின்படி, பொரம்பலூர் மாவட்டத்தில் மாவட்ட அரசு தலைமை அரசு மருத்துவமனையில் முதல் தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டத்திற்கு முதற்கட்டமாக 5,100 தடுப்பூசிகள் வரப்பெற்றுள்ளன.

இதன் முக்கிய நோக்கம் ‘கொரோனா இல்லாத தமிழகம்” என்ற சூழலை உருவாக்கி மக்கள் அனைவரும் நோயற்ற வாழ்வு வாழ வழிவகுக்கும். மேலும், தடுப்பூசி செலுத்துவதற்கு போதுமான காற்றோட்ட இடவசதி, இணைய இணைப்பு, மின்சாரம் பாதுகாப்பு, போன்றவற்றிற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யபட்டுள்ளது.

இந்த தடுப்பூசி செலுத்துபவர் முக்கிய பங்கு வகிப்பதால் அவர்களுக்கு தேவையான பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. மேலும், இந்த தடுப்பூசி திட்ட பணி ஒத்திகைக்கு தேவையான மருத்துவ பணியாளர்கள் தேர;வு செய்யப்பட்டு அவர்களின் விவரங்கள் COWIN செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. பயனாளிகள் தடுப்பூசியினை எங்கே எந்த இடத்தில் பெற வேண்டும் என்ற விவரங்கள் அவர்களின் கைப்பேசிக்கு செயலியின் மூலம் குறுந்தகவல் சென்றடையும். மேலும், அவர்கள் தடுப்பூசி பெற்றபின் தடுப்பூசி பெற்ற விவரங்கள் அடங்கிய சான்றிதழ்கள் செயலியின் மூலம் பெறுவர். இதனை தொடரந்து நான்கு கட்டமாக தடுப்புசி பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக அனைத்து மருத்துவ மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கும், இரண்டாம் கட்டமாக கொரோனா தடுப்பு பணியில் முன்னிலையில் பணிபுரியும் பணியாளர்களுக்கும், மூன்றாம் கட்டமாக 60 வயதிற்கு மேற்பட்ட அனைத்து மக்கள் மற்றும் நீண்டகால நோயினால் பாதிக்கப்பட்ட நபர்களும் மற்றும் நான்காம் கட்டமாக அனைத்து மக்களுக்கு தடுப்பூசி வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. எனவே சுகாதார துறையினர் மற்றும் அரசு அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு தடுப்பூசி செலுத்தும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கலெக்டர் அப்போது தெரிவித்தார்.

சுகாதார பணிகள் இணை இயக்குநர் கீதாராணி, இருக்கை மருத்துவர் ராஜா, கண்காணிப்பாளர் தர்மராஜ், மாவட்ட மலேரியா அலுவலர் சுப்ரமணியம் அரசு மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!