Corona Vaccination Special Camp 2 days a week for pregnant and lactating mothers: Perambalur Collector Information!

பெரம்பலூர் கலெக்டர் விடுத்துள்ள மற்றொரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை மிக வேகமாக பரவி மக்களிடையே பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் இந்த இரண்டாம் அலை தாக்கத்தினை கட்டுப்படுத்த தமிழக முதல்வரால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. கொரோனா நோயிலிருந்து அனைவரையும் பாதுகாக்கும் பொருட்டு 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பு+சி இரண்டு தவணைகள் வழங்கப்பட்டு வருகிறது.

பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை 1,74,481 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக கர்ப்பிணி தாய்மார்களையும், பாலூட்டும் தாய்மார்களையும் பெருந்தொற்றிலிருந்து காப்பதற்காக தடுப்பூசி செலுத்தும் திட்ட செயல்படுதுத்தப்பட்டு வருகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை 3,332 கர்ப்பிணி தாய்மார்களுக்கும், 1488 பாலூட்டும் தாய்மார்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

கடந்த, 30.07.2021 அன்று ஒருநாளில் மட்டும் 90 இடங்களில் கிராம சுகாதார குழுக்கூட்டம் நடத்தி அதில் 193 கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இனிவரும் நாட்களில் தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் திங்கள் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் மாவட்டத்திலுள்ள 90 துணை சுகாதார நிலையங்களிலும் கர்ப்பிணி மற்றும் பிரசவித்த தாய்மார்களின் கவனிப்பு, சிக்கல் உள்ள கர்ப்பிணி தாய்மார்களின் கவனிப்பு, சமுதாய சிக்கல் உள்ள கர்ப்பிணி தாய்மார்களின் கவனிப்பு, தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த ஊக்குவித்தல் மற்றும் செலுத்துதல், 1 வயதிற்குட்பட்ட குழந்தைகள் கவனிப்பு, 5 வயதிற்குபட்ட குழந்தைகள் கவனிப்பு, மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த ஊக்குவித்தல் மற்றும் செலுத்துதல், 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரையும் கொரோனா தடுப்பூசி செலுத்த ஊக்குவித்தல் மற்றும் செலுத்துதல் போன்ற சேவைகள் மக்களுக்கு வழங்கப்பட உள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் தங்களது பகுதிக்குட்பட்ட துணை சுகாதார மையங்களை அணுகி அங்கு வழங்கப்படும் சேவைகளை பெற்று பயனடையலாம் என தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!