Corona vaccine: Malaysian businessman Dato PRAKADEESH KUMAR donates silver plates to encourage the public!
பெரம்பலூர் மாவட்டம், பூலாம்பாடியை சேர்ந்தவர் டத்தோ.பிரதீஸ்குமார். இவர் மலேசிய உள்ளிட்ட பல நாடுகளில் வணிகம் செய்து வருகிறார். பூலாம்பாடியில் உள்ள அரசு பள்ளியில் படித்த அவர், அந்த ஊருக்கு பெருமை சேர்க்கும் வகையிலும், அவர் படித்த அரசு பள்ளியில் படித்து அதிக மதிப்பெண் பெறும் 3 மாணவர்களை அவருக்கு சொந்தமாக உள்ள சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே உள்ள தேவியாக்குறிச்சி கல்லூரியில், இலவசமாக படிக்க வைத்து வருகிறார். இந்நிலையில், மேலும், அவ்வூறுக்கு 5 வழித்தடத்தில் புதிய பேருந்துகளை அரசிடம் கோரிக்கை வைத்து இயக்க வைத்தார். பலருக்கு பல உதவிகளை செய்து சமூக பணியில் பங்கெடுத்து கொள்கிறார். இதையடுத்து பொதுமக்கள் கொரேனா தடுப்பூசியை போட்டுக் கொள்வதை ஊக்கப்படுத்துவதற்காக பூலாம்பாடி பேரூராட்சியை மக்களை ஊக்கப்படுத்த சில்வர் தட்டுகள் வழங்குவதாக அறிவித்து, பேரூராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தார். அதன்படி தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு, சில்வர் தட்டுக்கள் பூலாம்பாடியில் 490 பேருக்கும், அரும்பாவூரில் 653 பேருக்கும் லப்பைக்குடிக்காட்டில் 400 பேருக்கும், குரும்பலூரில் 483 பேருக்கும் என மொத்தம் 2026 பேர்களுக்கும் உடனடியாக நேற்று வழங்கப்பட்டது. சில்வர் தட்டுக்களை வழங்கி ஊக்கப்படுத்திய தொழிலதிபர் டத்தோ.எஸ்.பிரகதீஸ்குமாரை சமூக ஆர்வலர்கள், மக்கள் நல வாழ்வுத்துறை அதிகாரிகள், பொதுமக்கள் பராட்டினர்.