correcting the voter list, the special abstract work meeting perambalur
வரும் 01.01.2018 நாளை மைய நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது தொடர்பான பயிற்சி வகுப்பு வாக்காளர் பதிவு அதிகாரி, வருவாய் கோட்டாட்சியர், உதவி வாக்காளர் பதிவு அதிகாரி, வட்டாட்சியர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு, மாவட்ட ஆட்சியர் தலைமையில் நேற்று மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடத்தப்பட்டது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் மூலம் பயிற்சி பெற்ற மாவட்ட நிலை அலுவலர்களால் இப்பயிற்சியானது அனைத்து தேர்தல் அலுவலர்களுக்கும் வழங்கப்பட்டது.
வாக்காளர் பதிவு அதிகாரி, உதவி வாக்காளர் பதிவு அதிகாரி, சிறப்பு சுருக்க திருத்தப்பணி தொடர்பாக வாக்குச்சாவடி நிலை அதிகாரிகளுக்கும் மற்றும் வரையறுக்கப்பட்ட நிலை அலுவலர்களுக்கும் பயிற்சி வகுப்பினை வழங்கவுள்ளார்கள்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம் செய்தல் மற்றும் திருத்தம் பணிகள் மேற்கொள்ள வரும் 08.10.2017, 22.10.2017 ஆகிய இரு தினங்களில் சிறப்பு முகாம் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் நடைபெறவுள்ளது.
இப்பயிற்சி வகுப்பில் உதவி ஆணையர் (கலால்) சேதுராமன், மாவட்ட வருவாய் அலுவலர் பாஸ்கரன், தனித்துணை ஆட்சியர் மனோகரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மனோகரன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.