Demonstration in Perambalur to protest against corruption of AIADMK: A Raja Participate : DMK Party Notice

அ.தி.மு.க. அரசில் ஊழல்களை கண்டித்தும், முதல்வர் உட்பட அமைச்சர்கள் பதவி விலக வலியுறுத்தியும் பெரம்பலூரில் நாளை 18ம் தேதி திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. .

இது தொடர்பாக பெரம்பலூர் மாவட்ட திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

மத்திய வருமான வரித்துறை ஆய்வின் மூலம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சம்பந்தி தொடர்பான மிகப்பெரிய அளவில் நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தங்களில் நடைபெற்றுள்ள ஊழல்கள், துணை முதல்வர் ஓ.பி.எஸ். உறவினர்கள் வெளிநாடுகளில் செய்திருக்கும் முதலீடுகள், குட்கா ஊழலில் தமிழக காவல் துறை அதிகாரிகள் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் ஆகியோருடைய தொடர்பு மற்றும் உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணியின் ஏறத்தாழ ஆயிரம் கோடி ரூபாய் ஊழல், சத்துணவு முட்டை ஊழல் உள்ளிட்ட தமிழக அமைச்சர்களின் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் அணி வகுத்து வெளியில் வந்து கொண்டிருக்கிறது.

அனைத்து துறைகளிலும் லஞ்ச லாவண்யம் தலைவிரித்து ஆடுகிறது கூட்டுறவு தேர்தல்கள் ஜனநாயக முறைப்படி நடைபெறாமல் ஆளுங்கட்சியினரே பல்வேறு இயக்குனர்களாகவும். தலைவர்களாகவும் அறிவிக்கப்படுகிறார்கள். தமிழக மக்கள் விரோத அதி.மு.க. ஊழல் அரசின் முகத்திரையை கிழிக்கும் வகையிலும் – ஊழலில் தொடர்புடையவர்கள் பதவி விலக வலியுறுத்தியும் தமிழகத்தில் உள்ள மாவட்ட தலைநகரங்களில் வருகிற 18.09.2018 செய்வாய்க்கிழமை அன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்திட வேண்டும் என்ற தி.மு.கழக தலைவர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோளுக்கு இணங்க பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. சார்பில் நாளை காலை 10.00 மணி அளவில் புதிய பேருந்து நிலையம் அருகில் மாவட்ட செயலாளர் குன்னம்.சி.ராஜேந்திரன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக கட்சியின் கொள்கை பரப்பு செயலாளருமான ஆ.ராஜா உள்ளிட்ட பலர் கண்டண உரை நிகழத்துகின்றனர். மற்றும் மாவட்ட தி.மு.கழகத்திற்கு உட்பட்ட மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு. பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, நகர, ஒன்றிய, பகுதி, பேரூர், ஊராட்சி மற்றும் வார்டு கழக செயலாளர்கள், பிரதிநிதிகள், கழக சார்பு அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், மாவட்ட பிரதிநிதிகள், கழக தோழர்கள், பொதுமக்கள், அனைவரும் பெருந்திரளாகக் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் வெற்றியடைய கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!