Dengue larva worms companies fined Rs .1,35,000: Perambalur municipal

பெரம்பலூர் நகராட்சி ஆணையர் தலைமையில் நகராட்சிப் பொறியாளர், துப்புரவு ஆய்வாளர், பன்னீர்செல்வம், வருவாய் உதவியாளர், இளநிலை உதவியாளர், துப்புரவு பணி மேற்பார்வையாளர் மற்றும் நகராட்சி பணியாளர்களுடன் பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட பழைய பேருந்து நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டதில் 6 வணிக நிறுவனங்கள் டெங்கு கொசுப் புழுக்களை உருவாக்கும் வகையில் செயல்பட்டது கண்டறியப்பட்டது.

அந்த 6 வணிக நிறுவனங்களுக்கும் பொது சுகாதார சட்ட விதிகளின்படி அறிவிப்பு நோட்டீசு மற்றும் ரூ.35,000- மதிப்பில் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் பெம்பலூர் நகராட்சி வடக்கு மாதவி சாலையிலுள்ள டாஸ்மாக் குடோன் வளாகத்தை நேற்று ஆய்வு செய்து, டெங்கு கொசுப்புழுக்கள் உருவாகுவதை கண்டறிந்த நகராட்சி ஆணையர் டாஸ்மாக் நிர்வாகத்திற்கு ரூ.1 லட்சம் மதிப்பில் அபராதம் விதித்தார்.

அதனை தொடர்ந்து அதற்கான இரசீதை இன்று டாஸ்மாக் நிர்வாகத்திடம் இன்று வழங்கப்பட்டது. எனவே, பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்கள் டெங்கு கொசுப் புழுக்கள் உற்பத்தி ஆகாதவண்ணம் தங்கள் நிறுவனங்களை தூய்மையாக பராமரிக்கப்பட்ட வேண்டும். அவ்வாறு தூய்மையாக பராமரிக்காமல் டெங்கு கொசுப் புழுக்களை உற்பத்தி செய்வது கண்டறியப்பட்டால் அவர்களின் மீதும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என நகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!