Dengue Prevention Awareness Campaign on behalf of students of Allmighty Vidyalaya School

பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூர் ஆல்மைட்டி வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளி நிர்வாகம் மற்றும் மாணவ மாணவிகள் சார்பில் டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி செட்டிகுளம் கிராமத்தில் நடைபெற்றது.

பேரணிக்கு பள்ளி தாளாளர் ஆ.ராம்குமார் தலைமை வகித்தார். பங்குதாரர்கள் நடராஜன் மற்றும் அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

செட்டிகுளம் சார்பதிவாளர் அலுவலகம் அருகே தொடங்கிய பேரணி கடைவீதி பேருந்து நிலையம் மற்றும் சிவன்கோயில் வழி பின்புறம் வரை சென்று நிறைவடைந்தது.

தேங்கி நிற்கும் சாக்கடை கழிவுநீர் வீட்டின் அருகே புதர்போல் உள்ள செடிகொடிகளை அகற்றி டெங்கு காய்ச்சலை உண்டாக்கும் கொசுக்களை ஒழிப்போம் என்று கோஷமிட்டவாறு பள்ளி மாணவ மாணவிகள் பேரணியாக சென்றனர்.

பள்ளி முதல்வர் டாக்டர் சிவகாமி துணை முதல்வர் சாரதா செந்தில் குமார் ஆசிரியர்கள் சந்திரோதயம் ஹேமா மற்றும் தமிழரசன் மணிகண்டன் உள்பட பலர் பேரணியில் கலந்து கொண்டனர். பின்னர் சிறுவாச்சூரில் தேரடி திடலில் தொடங்கிய பேரணி திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை மதுரகாளியம்மன் கோவில் நுழைவு வளைவு வரை சென்று நிறைவடைந்து.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!