Department of Horticulture announces crop insurance for small onion farmers!

பெரம்பலூர் மாவட்ட தோட்டக்கலைத்துறை சார்பில் விடுக்கபட்டுள்ள தகவல்:

பெரம்பலூர் மாவட்டத்தில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, பயிர்கள் எதிர்பாராத காலநிலை மாற்றங்களால் விளைச்சலில் இழப்புகள் ஏற்படும் நஷ்டங்களை பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் மூலமாக காப்பீடு செய்வதன் மூலம் தவிர்க்கலாம்.

தற்போது, ராபி பருவத்தில் சாகுபடி செய்யும் சின்ன வெங்காயம் பயிருக்கு, நவம்பர்-30-ம் தேதிக்குள் காப்பீடு செய்ய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏக்கருக்கு ரூ.1976 காப்பீட்டுத் தொகையாக தங்கள் பகுதியில் உள்ள பொது சேவை மையம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் அல்லது வங்கிகள் மூலமாகவும் தொகை செலுத்தி பயன் பெற என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!