District Collector Reviews Operations of Perambalur-Ariyalur District Cooperative Milk Producers’ Union

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், திருவளக்குறிச்சியில் புதிதாக துவங்கப்பட்டுள்ள பி.ஆர்.டி.144 பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்திற்கு செயலாட்சியராக கலெக்டர் மிருணாளினி 14.03.2026 அன்று பணிப்பொறுப்பு ஏற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் செயல்பாடுகள் குறித்து அவர் நேரில் பார்வையிட்டு கோப்புகள் மற்றும் பதிவேடுகளை ஆய்வு செய்தார்.

கூட்டுறவு ஒன்றியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள பால் உற்பத்தியாளர்கள் மூலம் கொள்முதல் செய்யப்படும் பாலின் அளவு எவ்வளவு, கொள்முதல் செய்பவர்களின் எண்ணிக்கையினை உயர்த்துவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்தார். தொடர்ந்து, ஒன்றியத்தில் பராமரிக்கப்படும் கோப்புகள் மற்றும் பதிவேடுகளையும அவர் பார்வையிட்டார். அப்போது கூட்டுறவு மற்றும் வருவாய் துறையினர் உடனிருந்தனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!