Perambalur: Communist Party members stage protest condemning price hikes of petrol, diesel, and cooking gas!

பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயர்வை கண்டித்தும், மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்க கூடிய ஒன்றிய மோடி அரசின் நடவடிக்கைகளை கண்டித்தும் சிபிஐ(எம்), சிபிஐ பெரம்பலூர் மாவட்ட குழு சார்பில் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் கட்டண ஆர்ப்பாட்டம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு உறுப்பினர் கருணாநிதி தலைமையில் நடந்தது.

இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் பெ. ரமேஷ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெயராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் அகஸ்டின், மாவட்ட குழு உறுப்பினர் இரா.எட்வின், ராமகிருஷ்ணன் மற்றும் சிபிஐ நிர்வாகிகள்,சிபிஎம் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து, முழக்கங்கள் எழுப்பி கண்ட ஆர்ப்பாட்டம் செய்தனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!