Diwali festival: Monitoring camera in 100 locations to prevent crime – Namakkal SP Information

நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்பி அருளரசுவெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் அதிகம் கூடும் இடங்களான கோயில்கள், பேருந்து நிலையம், கடைவீதி, முக்கிய சாலை சந்திப்புகள், பூங்கா போன்ற இடங்களில் குற்றசம்பவங்கள் நடைபெறமால் தடுக்கவும், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும் சுழற்சி முறையில் ரோந்து காவலர்கள் பணியாற்ற ரோந்து காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, பள்ளிப்பாளையம், குமாரபாளையம், பரமத்திவேலூர் நகரங்களில் உள்ள முக்கிய கடைவீதிகளில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் காவல் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு மற்றும் ஒலி பெருக்கிகள் மூலம் குற்றச்செயல்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும். இதனை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கையெடுக்கப்படும்.

மாவட்ட எல்லையில் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு குறிப்பிட்ட நேரங்களில் வாகனத்தணிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருட்டு, சந்தேக நபர்கள் குறித்து 100,112, 04286-280161, 280007 ஆகிய தொலைபேசி எண்கள், 8939928100 என்ற செல்லிடப்பேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.

மேலும் 7997700100 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி மற்றும் கட்செவி அஞ்சல் மூலம் புகார் தெரிவிக்கலாம். முகநூல், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் டிஎன்பிடிஐஎஎல்100 என்ற முகவரி மூலம் காவல் துறையினரை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

வாகன சோதனையின் போது வாகன ஓட்டிகள், ஓட்டுநர் உரிமம், பதிவு சான்றிதழ், காப்பீட்டுச் சான்றிதழ் போன்றவற்றை டிஜி லாக்கர் செயலி மூலம்செல்போனில் ஆவணங்களை சமர்பித்தால் ஏற்றுக்கொள்ளப்படும்.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!