DMK wearing black shirt protests in Perambalur: Congress Party protests
பெரம்பலூர் : மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை கண்டித்து பெரம்பலூரில் திமுக உள்ளிட்ட கட்சியினர் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்ம் நடத்தினர்.
பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நவம்பர் 8-ம் தேதி தேதியை கருப்பு தினமாக அனுசரிப்பதுடன், மாவட்டம் தோறும் ஆர்ப்பாட்டமும் நடைபெறும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதையொட்டி பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தினுள் அருகே கருப்புச் சட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட செயலாளர் குன்னம் சி.ராஜேந்திரன், தலைமை வகித்தார். பெரம்பலூர் நகர செயலாளர் ம.பிரபாகரன் உள்ளிட்ட கட்சியின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
வி.சிக. மாவட்ட செயலாளர் சி.தமிழ்மாணிக்கம் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் பலர் கலந்து கொண்டனர். தி.க, ம.ம.க., இ.யூ.மு.லீ., இ.தொ.ம.மு.க உள்ளிட்ட கட்சிகள், அமைப்புகள் கலந்து கொண்டன.
காங்கிரஸ் கட்சி சார்பில் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் காந்தி நிலைக்கு முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தினர்.