Dowry Control and Child Marriage Prevention Awareness Camp in Veppur Women’s College near in perambalur

பெரம்பலூர் : வரதட்சணை ஒழிப்பு மற்றும் குழந்தை திருமண தடுப்பு விழிப்புணர்வு முகாம், இன்று வேப்பூர் அரசு மகளிர் கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா தலைமையில் நடைபெற்றது. அதில் ஆட்சியர் பேசியதாவது:

மாணவ, மாணவியர்கள் தங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்தி கொள்ள கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். மேலும் இச்சமுதாயம் அனைத்து தளங்களிலும் சிறப்பாக செயல்பட, பெண்கள் அனைத்து துறைகளிலும் தங்கள் திறமைகளை முழுமையாக வெளிப்படுத்த வேண்டும்.

சமூகத்தில் பெண்கள் தங்களது திறமையை வெளிப்படுத்துவதில் பல்வேறு சவால்கள் உள்ளன. அதில் ஒன்றுதான் பெண் குழந்தைகளுக்கு பள்ளிச்செல்லும் வயதில் திருமணம் செய்தல் ஆகும்.

இதனை முற்றிலுமாக தடுப்பதற்கு குழந்தைகள் திருமணத்திற்கு எதிராக ஆண், பெண் பேதமின்றி அனைத்து மக்களும் குரல் கொடுக்க வேண்டும். குழந்தை திருமணம் செய்வதன் காரணமாக பெண்கள் உடலவில் பாதிக்கப்படுவதுடன், மனதளவிலும் பாதிக்கப்படுகிறாள். இதன் காரணமாக நம் நாட்டில் பெண் சிசு கொலை, தற்கொலை முயற்சிகள், விவாகரத்து மற்றும் குழந்தைகளை வளர்ப்பதற்கு போதிய பொருளாதார வசதியின்மை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

இப்பிரச்சினைகளால் பெண்கள் துவண்டு போய்விடாமல், இப்பிரச்சினைகளை களைந்திட ஒரு பெண்ணிற்கு கல்வி அறிவு மிகவும் முக்கியம். பெண் கல்வி பெற்றால் எந்த ஒரு சூழ்நிலையிலும் தனியாக மன தைரியத்துடன் சமாளிக்கும் தன்னம்பிக்கையும், அறிவும் பிறக்கும்.

மேலும், பிற ஊர்களுக்கும், வெளிநாடுகளுக்கும் சென்று அங்குள்ள பெண்களின் முன்னேற்றங்களையும், சாதனைகளையும் அறிந்து அதன்படி நடக்க முயற்சி செய்தும், சாதித்தும் காட்டவேண்டும். உயர்ந்த கல்வி அறிவு பெற்றால்தான் பெண்கள் வேலைக்கு செல்லவும், உயர்ந்த பதவிகளிலும், தொழில் துறையிலும் சிறந்து விளங்கி தன் குடும்பத்தை நல்ல முறையில் காத்திடமுடியும்.

பெண்களுக்கு எந்த வயதில் திருமணம் செய்துகொண்டால் வாழ்க்கைக்கும், உடலுக்கும், எதிர்காலத்திற்கும் சிறந்தது என்பதை சமுதாயமும், குடும்பமும் உணா;ந்து செயல்படவேண்டும். எந்த அளவிற்கு நம் நாட்டின் பெண்கள் கல்வி அறிவுடன் சிறந்து விளங்குகிறாளோ அதன்படியே அவளது குடும்பமும் சிறப்புடன் விளங்கும். பெண்களின் சிறந்த கனவுகளே அவர்களது வாழ்க்கையை சிறப்புடன் தீர்மானிக்கிறது. பெண்களுக்கு 18 வயதிற்கு முன்னதாக திருமணம் செய்வது சட்டப்படி செல்லாது என்பதை சமுதாயம் உணர்ந்து செயல்படவேண்டும்.

எனவே, மாணவ, மாணவிகள் அனைவரும் வரதட்சணை கொடுமை மற்றும் குழந்தை திருமணத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் முழுமையாக அறிந்து கொள்வதுடன், அக்குற்றச் செயலுகுறிய தண்டனைகள் குறித்தும் தெரிந்து கொண்டு தங்கள் பகுதிகளில் ஏதேனும் வரதட்சணை கொடுமை மற்றும் குழந்தைகள் திருமணங்கள் நடைபெறுவது தெரிய வந்தால் 1098 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். புகார் கொடுப்பவரின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும், என தெரிவித்தார்.

மேலும், பாதிக்கப்பட்ட குழந்தைகள், பாதுகாப்பற்ற குழந்தைகளுக்கு படிப்பு செலவிற்காக மாதம் ரூ.2000- வழங்கப்படுகிறது என்று மாவட்ட குழந்தை பாதுகாப்பு நல அலுவலர் பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட சமூக நல அலுவலர் பூங்கொடி, கல்லூரி முதல்வர் சுப்ரமணியன், வழக்கறிஞர் செந்தில்நாதன், சமூக நல விரிவாக்க அலுவலர் ரோஸ்லின்மார்கிரெட் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!