Draft Release of Ward Reservation for Perambalur Municipalities

தமிழ்நாடு மறுவரையறை ஆணைய ஒழுங்குமுறைகளின் படி 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பினை அடிப்படையாகக் கொண்டு பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் நகராட்சி வார்டு மறுரையறை கருத்துருக்கள் தயார் செய்யப்பட்டதை தொடர்ந்து நேற்று மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் பெரம்பலூர் நகராட்சி மறுவரையறை வரைவு பட்டியல்களை மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா வெளியிட, நகராட்சி ஆணையர் பெற்றுக் கொண்டார்.
பெரம்பலூர் நகராட்சி அமைப்புகளுக்கான வார;டு மறுவரையறை வரைவு பட்டியல்கள் சம்மந்தப்பட்ட நகராட்சி அலுவலகம், பழைய நகராட்சி அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட உள்ளன.
இவ்வரைவு மறுவரையறையின் மீது கருத்துருக்கள் மற்றும் ஆட்சேபனைகளை தெரிவிக்க விரும்பும் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் தங்களுடைய கருத்துருக்கள் மற்றும் ஆட்சேபனைகளை எழுத்துப் பூர்வமாக நகராட்சி ஆணையர் அல்லது மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாகவோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ 02.01.2018 மாலை 5.45 மணி வரை தெரிவிக்கலாம்.










kaalaimalar2@gmail.com |
9003770497