Edappadi Tamil Nadu, mortgaged to Modi; DMK to recover A. Raja MP said that they should support!

பெரம்பலூர், திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், எம்.பியுமான ஆ.இராசா, குன்னம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் எஸ்.எஸ்.சிவசங்கரை ஆதரித்து குன்னத்தில் திரண்டிருந்த பொதுமக்களிடம் உதயசூரியன் சின்னத்தில் வாக்குகள் சேகரித்தார். அப்போது ஆ.இராசா, எம்.பி, பேசியதாவது;

தற்போது மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டத்தில் விவசாயிகளுக்கு பாதுகாப்பில்லை, அந்த வேளாண் சட்டத்தை தி.மு.க,காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியாவில் உள்ள அனைத்து கட்சிகளும் எதிர்த்தது. ஆனால் தமிழகத்தில் உள்ள எடப்பாடி அரசு மட்டுமே ஆதரித்தது.

விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மு.க. ஸ்டாலின் சொன்னபோது, அப்போது விவசாய சங்கங்கள் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு போட்டனர், அப்போது எடப்பாடி என்ன சொன்னார் என்றால் தமிழகத்தில் வறட்சியில்லை, இயற்கை பேரிடரும் ஏற்படவில்லை விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்யும் அளவிற்கு அரசு கஜானாவில் பணமில்லை என்று 2 ஆண்டிற்கு முன்பு கோர்ட்டில் சொன்ன எடப்பாடி, தற்போது ஸ்டாலின் சொன்ன பிறகு விவசாய கடன்களை தள்ளுபடி செய்கிறார். எடப்பாடிக்கு சொந்த புத்தியில் அல்ல, அ.தி.மு.க. ஆட்சியில் ஏதேனும் நல்லது நடந்திருந்தால் எல்லாம் தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் தந்த புத்தியால் தான் என்றும் பேசிய அவர், தி.மு.க.ஆட்சியில் கொண்டு வரப்பட்ட வட சென்னை, வல்லூர், உடன்குடி, மேட்டூர் உள்ளிட்ட இடங்களில் 5000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டம் போடப்பட்டது.

இன்றைக்கு தமிழ்நாட்டில் ஓரளவிற்கு மின்சாரம் தடையில்லாமல் வருவதற்கு கலைஞர் ஆட்சிதான் காரணம். கிராமப்புற மாணவர்களுக்கு மருத்துவக்கல்லூரியில் சேருவதற்கு 10 சதவிகிதம் தரச்சொன்னது திமுகு தலைவர் மு.க.ஸ்டாலின், 7 சதவிகிதம் எடப்பாடி பழனிச்சாமி தந்தார். 5 லட்சம் விவசாயிகள் பம்பு செடடிற்கு மின் இனைப்பு கேட்டு மனு கொடுத்துவிட்டு காத்திருக்கின்றனர். அவர்களுக்கு மின் இனைப்பு வழங்காமல் வெளி மாநிலங்களில்இருந்து மின்சாரம் வாங்கி கொள்ளைடித்தார்கள். ஜெயலலிதா இருந்த வரையில் நீட் வரவில்லை, ஜி.எஸ்.டி.வரவில்லை, தமிழகத்திற்கு வர வேண்டிய ஜி.எஸ்.டி. வரிப்பணம் 19 ஆயிரம் கோடியில் வெறும் ஆயிரம் கோடி மட்டுமே வழங்கினார். மீதி 18 ஆயிரம் கோடி என்னாச்சு, யானை பசிக்கு சோளப்பொறி போட்டுள்ளனர். இப்படி தமிழகத்தை மோடியிடம் எடப்பாடி அடகு வைத்து விட்டார். அதனை மீட்பதற்காக உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றும் பேசினார். கூட்டத்தில், மாவட்ட செயலாளர் குன்னம்.சி.ராஜேந்திரன், உள்ளிட்ட முக்கிய பொறுப்பாளர்கள், வக்கீல் ஹரிபாஸ்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!