பெரம்பலூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான நந்தக்குமார் தெரிவித்துள்ளதாவது:
நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
அனைத்து தரப்பு மக்களுக்கும் இந்த தகவல் சென்று சேர வேண்டும் என்ற நோக்கத்தில் பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் 1 லட்சத்து 72 ஆயிரத்து 99 குடும்ப அட்டைதாரர்களின் அட்டைகளிலும் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய அட்டைகள் இணைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
அனைத்து நியாய விலைக்கடைகளுக்கும் கொடுக்கப்பட்டுள்ள இந்த விழிப்புணர்வு அட்டைகள் பொதுமக்கள் பொருட்கள் வாங்க வரும் பொழுது குடும்ப அட்டைகளில் இணைக்கப்படுகின்றது.
அதேபோல கடந்த தேர்தல்களில் வாக்குப்பதிவு 70 சதவீதத்திற்கும் குறைவாக பதிவான பகுதிகளில் உள்ள சுமார் 80 ஆயிரம் வீடுகளில் மே 16ஆம் தேதி நேர்மையுடன் 100 சதவீத வாக்களிக்கவேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு வில்லைகள் ஒட்டப்பட்டு வருகின்றது.
எனவே, பொதுமக்கள் அனைவரும் மே 16 தவறாமல் நேர்மையுடன் 100 சதவீதம் வாக்களிக்க முன்வரவேண்டும், என தெரிவித்துள்ளார்.