பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதி முறைகள் முறையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி தேர்தல் நடத்தை விதி முறைகளுக்கு எதிரான நடவடிக்கைகள் முழுவதும் பறக்கும் படை, தீவர கண்கானிப்புக்குழு, விடியோ வியூவிங் குழு உள்ளிட்ட குழுக்களின் மூலமாக தொடர;ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றது.
மேலும் இக்குழுக்கள் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் தொடர்ந்து வாகன தணிக்கை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு தேர்தல் விதிமுறைமீறல்களை கண்கானித்து வருகின்றனர்.
அந்த வகையில் இன்று பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்கான பறக்கும் படை அலுவலர் கண்ணன் தலைமையிலான குழுவினர் பெரம்பலூர் நான்கு ரோடு பகுதியல் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இவ்வாகன சோதனையின் போது தேர்தல் விதிமுறைகளுக்கு மாறாக உரிய ஆவணங்கள் இல்லாமல் பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் உள்ளிட்டவை ஏதாவது வாகனங்களில் கொண்டு செல்லப்படுகின்றதா என்பதை தீவிரமாக சோதனை நடத்தினர்.
இதுபோன்று பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்டமன்ற தொகுதிகளுக்கு தலா 3 பறக்கும் படை வீதம் மொத்தம் 6 பறக்கும் படையினர் தீவிர வாகனச்சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
எனவே பொதுமக்கள் அனைவரும் தாங்கள் எடுத்து செல்லப்படும் பணம் மற்றும் பொருட்களுக்கு உரிய ஆவணங்களை உடன் கொண்டு செல்ல வேண்டும். உரிய ஆவணங்களின்றி எடுத்துச்செல்லப்படும் பணம் மற்றும் பரிசுபொருட்கள் பறக்கும் படை அலுவலர்களால் பறிமுதல் செய்யப்படும், என மாவட்ட ஆட்சியரக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்ட்டுள்ளது.
https://youtu.be/4sKw1Wsl_fk