Electricity consumers in Perambalur-Ariyalur districts can contact the 24-hour center to resolve their complaints and grievances!
தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிரமானக் கழகத்தின் பெரம்பலூர்-அரியலூர் வருவாய் மாவட்டங்கள் அடங்கிய பெரம்பலூர் மின்வட்டத்தின் மேற்பார்வை பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது.
பெரம்பலூர் மற்றும் அரியலூர் வருவாய் மாவட்டத்தில் உள்ள மின்நுகவோர்கள் தங்களின் மின்சாரம் தொடர்புடைய புகாh;கள், குறைகளை வாரத்தில் அனைத்து நாட்களிலும் முழுநேரமும் இயங்கும் மின்னகம்-மின்நுகர்வோர் அழைப்பு மையத்தை 94987 94987 என்ற செல்பேசி எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம்.
மேலும், பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களின் மின் நுகர்வோர்கள் தங்களது புகார்களை மின்பகிர்மான கழகத்தின் இணையதள பக்கத்தில் பதிவேற்றம் செய்யலாம். புகார்களை சம்மந்தப்பட்ட பிரிவு அலுவலகத்திலும் பதிவு செய்யலாம். அங்கு புகார்கள் தீர்வு காணப்படவில்லை என்றால் அடுத்த கட்டமாக உதவி செயற்பொறியாளர்கள், செயற்பொறியாளர் ஆகியோரை தங்களது புகார் குறித்து அணுகலாம்.
இதுதவிர பெரம்பலூர் மின்பகிர்மான வட்டத்தின் மேற்பார்வை பொறியாளர் தலைமையில் பெரம்பலூர் மற்றும் அரியலூர் மின்கோட்ட அலுவலகங்களில் ஒவ்வொரு மாதமும் 2-வது மற்றும் 3-வது செவ்வாய் கிழமைகளில் நடைபெறும் மின்சார குறைதீர்க்கும் கூட்டத்தில் மின்நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை மேற்பார்வை பொறியாளரிடம் நேரில் மனுவாக சமர்ப்பித்து தீர்வு பெறலாம். இந்த வழிகளில் தங்களது மின்புகார்கள் அல்லது குறைகள் தீர்க்கப்படாத நிலையில் மட்டும் மின்சார விதி 2003 சரத்துகளின் படி பெரம்பலூர் மின்பகிர்மான வட்டத்தின் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் மன்றத்தில் ( இ.பி. கன்ஸ்யூமர்ஸ் ரெட்ரெசல் போரம்) மனுவாக சமர்ப்பிக்கலாம், என தெரிவிக்கப்பட்டிருந்தது.