Electricity contract workers demonstrated in Perambalur demanding fulfillment of demands.
பெரம்பலூர் : தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு மின்வாரிய ஒப்பந்த பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பெரம்பலூர் நான்குரோடு மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வட்டதலைவர் கே.கண்ணன் தலைமை வகித்தார். பெரம்பலூர் பொது கோட்ட செயலாளர் ஆர்.இராஜகுமாரன் மற்றும் எம்.பன்னீர்செல்வம் உழகை;கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு சி.இராஜகுமாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்ட செயலாளர் எஸ்.அகஸ்டின்ää பொருளாளர் வி.தமிழ்செல்வன் ஆகியோர் ஆர்ப்பாட்ட உரையாற்றினர். சிஐடியு மாவட்ட செயலாளர் ஆர்.அழகர்சாமிää ஓய்வுபெற்றோர் நலஅமைப்பு எ.கணேசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். புல ஆண்டு காலமாக பணியாற்றிவரும் ஒப்பந்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்ää அனைவருக்கும் போளஸ் மற்றும் கருணைத்தொகை வழங்க வேண்டும்ää கே2சிட் அக்ரிமெண்ட் முறையில் அனைத்து ஒப்பந்த பணிகளை செய்ய வேண்டும் அனைவருக்கும் அடையாள அட்டை வருகைப்பதிவேடு வழங்க வேண்டும் விபத்தில் உயிர் இழக்கும் தொழிலாளிகள் அனைவருக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும்ää சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முடிவில் கோட்ட தலைவர் பி;.நாராயணன் நன்றி கூறினார்.