Emergency Helpline Numbers for Senior Citizens: Perambalur Collector Announcement!

பெரம்பலூர் கலெக்டர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

பெரம்பலூர் மாவட்டத்தில் கோவிட்-19 தொற்று பரவல் காலத்தில் மூத்தக் குடிமக்களுக்கு எதிரான வன்முறைகளை தடுத்திடவும், அவர்களின் பாதுகாப்பினையும், சுகாதாரத்தினையும் உறுதி செய்யும் பொருட்டு, தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சமூக நலத்துறையின் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மூத்த குடிமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதன் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திடவும், மூத்த குடிமக்களுக்கு தேவையான மனநல ஆலோசனை வழங்குவதற்கும், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. கோவிட்-19 நோய் தொற்று பரவல் காலத்தில் வீட்டில் தனிமையில் அல்லது உறவினர்களுடன் தங்கி உள்ள மூத்த குடிமக்கள் தங்களுக்கு தேவைப்படும் அவசர உதவிகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பாக சேவைகள் பெற்றிடவும், கோவிட்-19 குறித்த விளக்கங்கள் பெற்றிடவும் 93840 56223 என்ற அவசர தொலைபேசி எண்ணிலும், மாவட்ட சமூக நல அலுவலகத்தை 04328 – 296209 என்ற தொலைபேசி எண்ணிலும், அவசர உதவி எண் (இலவச சேவை எண்) 181-லும், ஒருங்கிணைந்த சேவை மையம் – நிர்வாகியை 63804 69886 என்ற கைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!