Equipment for Perambalur Government Hospital at a cost of Rs. 8.85 lakhs on behalf of the American Tamil Association, Tamil Nadu Foundation

அமெரிக்கா வாழ் தமிழ்ச் சங்கம் மற்றும் தமிழ்நாடு பவுண்டேஷன் சார்பில் வழங்கப்பட்ட ரூ.8.85 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை, பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.

தமிழ்நாடு முதலமைச்சர், தற்போது பரவி வரும் கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்திட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளித்திடவும், சிகிச்சை வழங்குவதற்காகவும், முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு அனைத்து தமிழர்களும் நிதி வழங்கிடவேண்டும் என வேண்டுகோள் விடுத்ததன் அடிப்படையில் பல்வேறு தரப்பிலிருந்து மருத்துவ உபகரணங்களை வழங்கி வருகிறார்கள்.

அதனடிப்படையில் பெரம்பலூர் மாவட்டத்திற்கு அமெரிக்க வாழ் தமிழ்ச்சங்கம் மற்றும் தமிழ்நாடு பவுண்டேஷன் என்ற அமைப்பைச் சார்ந்த தமிழ்நாடு பவுண்டேஷன் தலைவர் உஷாசந்திரன், இந்தியாவிற்கான ஒருங்கிணைப்பாளர் சோமசுந்தரம், இந்தியாவிற்கான தமிழ்நாடு பவுண்டேஷன் தலைவர் ராஜரெத்தினம், செயல் இயக்குநர் இளங்கோ ஆகியோர் மூலம் கொரோனா பெருந்தொற்றை முன்னிட்டு பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு ரூ.8.85 லட்சம் மதிப்பிலான ஆக்ஸிஜன் உபகரணங்களை வழங்கினர்.

இதில் 1000 எண்ணிக்கையில் மூக்கு வழியாக ஆக்ஸிஜன் செலுத்தும் குழாய் 1000 எண்ணிக்கையில் ஆக்ஸிஜன் அடர்த்தியினை அதிகப்படுத்தும் முகக்கவசங்கள் 100 எண்ணிக்கையில் ஆக்ஸிஜன் செலுத்துமானி, 1000 எண்ணிக்கையில் ஆக்ஸிஜன் அளவை அவ்வப்போது மாற்றிக் கொள்வதற்கு ஏதுவான 1000 முகக்கவசங்கள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் உள்ளன. இதனை மருத்துவக் கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரம் முன்னிலையில், கலெக்டர் வெங்கடபிரியா அரசு தலைமை மருத்துவமனை மருத்துவ அலுவலர் மரு. ராஜாவிடம் வழங்கினார்.

இந்த மருத்துவ உபகரணங்கள் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக பயன்படுத்தப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியில் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் கீதாராணி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!