Shanti Restaurants, Sweets, Bakery Opening Ceremony in Perambalur!

பெரம்பலூரில் கடந்த 23 ஆண்டுகளாக ஹோட்டல் மற்றும் டீக்கடை தொழிலில் ஈடுபட்டு வந்த சாந்தி நிறுவனம், பழைய பேருந்து நிலையம் காமராஜர் வளைவு புதிய பேருந்து நிலையம் பகுதிகளில் ஐந்து கிளைகளுடன் இயங்கி வருகிறது. ஆர்டரின் பெயரில் கேட்டரிங் மற்றும் உணவு சப்ளை செய்து வரும் சாந்தி நிறுவனம் புதிதாக பேக்கரி மற்றும் ஸ்வீட், ஐஸ்கிரீம், ஜுஸ் ஆகியவற்றுடன் புதிய கடையை பெரம்பலூர் நகராட்சி அலுவலகம் எதிரில் விரிவுப்படுத்தப்பட்ட சாந்தி ரெஸ்டாரண்ட்ஸ், ஸ்வீட்ஸ் அன்ட் ஸ்நாக்ஸ், பேக்கரி திறப்பு விழா கடந்த மே.4ம் தேதி நடந்தது.

விழாவிற்கு சாந்தி ரெஸ்டாரண்ட்ஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் செல்வராஜ் தலைமை வகித்தார், நிர்வாக இயக்குநர் பிரேமா வரவேற்றார். வரகுபாடி முத்துசாமி, ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக நகராட்சி ஆணையர் குமரிமன்னன் கலந்துகொண்டு உணவகத்தை திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றி வைத்தார்.

விழாவில் நகராட்சி தலைவர் அம்பிகா,ஆலத்தூர் ஒன்றியக்குழு தலைவர் கிருஷ்ணமூர்த்தி, வக்கீல் ராஜேந்திரன், அஸ்வின்ஸ் குழும நிர்வாக இயக்குனர் கணேசன், புது பஸ் ஸ்டாண்ட் வியபாரிகள் சங்க தலைவர் செல்லபிள்ளை, ரியல் எஸ்டேட் உரிமையாளர் சுப்புடு (எ) சுப்ரமணியன், லயன்ஸ் கிளப் தலைவர் முரளிதரன், மாவட்ட தலைவர் செந்தூர் மெடிக்கல் சுகுமார், ராஜூ எலக்ட்ரிக்கல் ஹார்டுவேர் உரிமையாளர் ரவிக்குமார், வாழ்வியல் கலை பயிற்றுனர் ஹேமா, அரும்பாவூர் குறிஞ்சி சிவா, பூலாம்பாடி பத்திர எழுத்தர் சிவக்குமார், கல்யாணி மெஸ் உரிமையாளர்கள், பெரம்பலூர் நகர முக்கிய பிரமுகர்கள் மற்றும் டீக்கடை, உணவக உரிமையாளர்கள், வணிகர் சங்கத்தினர்கள், நாரணமங்கலம், வரகுபாடி பகுதியை சேர்ந்த உறவினர்கள், நண்பர்கள் என பலர் திரளாக கலந்து கொண்டு வாழ்த்தினர்.

வரும் மே.9ந்தேதி வரை 1 கிலோ ஸ்வீட் வாங்கினால் அரை கிலோ கார வகைகளும், 1 கிலோ கார வகை பதார்த்தங்கள் வாங்கினால் கால் கிலோ ஸ்வீட்டும், 1 கிலோ கேக் ஆர்டர் செய்தால் கால் கிலோ ஸ்வீட்டும், 2 கிலோ போட்டோ பிரிண்ட் கேக்கிற்கு, போட்டோ பிரிண்டும் இலவசமாக திறப்பு விழா சலுகையாக அனைவருக்கும் வழங்கப்படுகிறது என நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!