Factories and companies must adhere to corona prevention protocols: Perambalur Collector
பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் அனைத்து துறைகளின் சார்பில் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் பொது ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ள நிலையில் பல்வேறு தளர்வுகள் மற்றும் புதிய சில கட்டுப்பாடுகளுடன் 30.04.2021 நள்ளிரவு 12.00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கொரோனா நோய்த் தொற்றின் காலத்திலும், தடையின்றி செயல்பட வேண்டிய தொடர் செயல்முறை தொழிற்சாலைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் முழு ஊரடங்கின்போதும் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கின்போது நிறுவனங்களுக்கு சுழற்சி முறையில் வந்து செல்லும் பணியாளர்கள், வந்து செல்வதற்கு ஏதுவாக அடையாள அட்டைகளை சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் வழங்கவேண்டும்.
தொழிற்சாலைகளில் கொரோனா நோய்த் தொற்று தொடர்பான அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தொழிற்சாலை நுழைவு வாயிலில் சோப்புத் திரவம் மூலம் கை கழுவும் வசதி, கிருமிநாசினி தெளித்தல், பணியாளா;கள் முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றி பணியாற்றுவதை நிறுவனங்கள் உறுதிப்படுத்துதல் வேண்டும்.
பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனை, 2 தனியார் மருத்துவமனை, 29 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 15 மினி கிளினிக்குகள் மற்றும் சிறப்பு முகாம்கள் என 70 முகாம்கள் மூலம் கோவிட் 19 தடுப்பூசி தினசரி செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 29,084 நபர்களுக்கு கோவிட் 19 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தொழிற்சாலைகள், நிறுவனங்கள், அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுடன் தொடர்பு கொண்டு, 45 வயதிற்கு மேற்பட்ட நபர்களுக்கு தடுப்பூசி வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும், என தெரிவித்துள்ளார்.