Farmers, perambalur near the transformer repair plea to remove the roadblock and capturing Time

பெரம்பலூர் மாவட்டம் வேலூர் ஊராட்சிக்கு உட்பட்ட புதுவேலூர் மற்றும் கீழக்கணவாய் பகுதிகளுக்கு மின்வினியோகம் செய்து வந்த மின்மாற்றி ஒன்று பழுதானது. அதனை பொதுமக்களே சரிசெய்து மீண்டும் பொருத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சுமார் 2 வாரத்திற்கு முன்பு பழுதான மின்மாற்றியை பழுதி நீக்கி மின் வினியோகம் செய்து தரக்கோரி அப்பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதிகாரிகள் பழுது நீக்கம் செய்வதில காலம் தாமதம் ஏற்பட்டு வந்ததால், இன்று ஆத்திமுற்ற அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் ஒன்று இன்று காலை பெரம்பலூர் – செட்டிகுளம் சாலையில் கீழக்கணவாய் கிராமத்திற்கும் வேலூர் கிராமத்திற்கும் இடையே 150க்கும் மேற்ப்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் பெரம்பலூர் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் சாலை மறியலை கைவிட்டனர்.
இதனால், அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.










kaalaimalar2@gmail.com |
9003770497