Farmers unadulterated, not only want to provide quality seeds – seed sellers Perambalur the order of the District Joint Director of Agriculture

seed
பெரம்பலூர் மாவட்ட வேளாண்மைத்துறை இணை இயக்குநர் பொ. சந்திரன் பிறப்பித்துள்ள உத்தரவு :

விவசாயிகளுக்கு தரமான விதைகள் கிடைக்கும் பொருட்டு விதை ஆய்வுத் துறை செயல்பட்டு வருகிறது.

விவசாயிகளுக்கு தரமான விதைகள் தங்குதடையின்றி கிடைக்கவும், விதை விற்பனையாளர் விதைச் சட்ட நடைமுறைகளை பின்பற்றி விதை வணிகம் செய்வது பற்றி தெரிந்துகொள்ள திருச்சிராப்பள்ளி விதை ஆய்வுத்துறை சார்பாக பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் விதை விற்பனையாளர்களுக்கு புத்தூட்டப்பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றது.

இப்பயிற்சியில் விதை விற்பனை நிலையங்களுக்கு உரிமம் பெறுவது, உரிமம் புதுப்பித்தல், விதை இருப்புப்பலகை, விதைஇருப்புப் பதிவேடு பராமரித்தல், விவசாயிகளுக்கு விற்பனை ரசீது வழங்கும் போது விதையின் பெயர;, இரகம், கொள்கலன் அளவு, குவியல் எண், காலாவதிநாள், விவசாயிகளின்; கையொப்பம் பெறுதல் மற்றும் மாதாந்திர இருப்புமற்றும் விற்பனைவிபரம் சமர;ப்பித்தல் போன்ற நடைமுறைகள் குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்படும்.

மேலும், விதை விற்பனை நிலையங்களில் விதைகள் சேமிக்கும் பொழுது உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிமருந்துகள் அருகில் வைக்காமல், குவியல் வாரியாக மரஅட்டகங்களில் சரியாக அடுக்கி வைக்கவேண்டும் எனவும் முளைப்புத்திறன் பாதிக்காமல் விதைகள் இருப்புவைத்திடுதல், விதை ஆய்வாளர;கள் விதை விற்பனை நிலையங்களில் எடுக்கப்படும் விதை மாதிரிகளை எவ்வாறு பரிசோதனை செய்து முடிவறிக்கை அனுப்பப்படுகிறது என்பன போன்ற அறிவுரைகளும் தெளிவாக விளக்கப்படும்.

ஜுலை 20 அன்று கூட தனியார் விதை விற்பனையாளர்களுக்கு புத்தூட்டப் பயிற்சி பெரம்பலூரில் நடைபெற்றது.

இதில் திருச்சிராப்பள்ளி, விதை ஆய்வு துணை இயக்குநர் சே.முகம்மது அப்துல் நசீர், பெரம்பலூர் விதைச்சான்றுஉதவி இயக்குநர் கு.பழனிசாமி, விதை பரிசோதனை நிலைய மூத்த வேளாண்மை அலுவலர் யு.ராஜேந்திரன், மாவட்ட விதை ஆய்வாளர்கள் மா.மோகன்தாஸ், வே.அறிவழகன், விதைஆய்வாளர் மா.சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு விதை விற்பனையாளர்களுக்கு உரிய பயிற்சிகளை வழங்கினர்.

தனியார் விற்பனையாளர்கள் இதுபோன்ற பயிற்சிகளில் பங்குபெறுவதோடு இருந்துவிடாமல் இந்தப் பயிற்சியில் வழங்கப்பட்ட அறிவுரைகளின்படி முறையான, தரமான, கலப்படமற்ற விதைகளை உற்பத்தியாளர்களிடம் கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு உரியபருவத்தில் விநியோகம் செய்திட வேண்டும்.

பெரம்பலூர் மாவட்டத்தில 52 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் மக்காச்சோளமும், 36,000 ஹெக்டேர் பரப்பளவில் பருத்தியும் பயிரிடப்பட்டது. இதில் பருத்தி மற்றும் மக்காச்சோளம் பயிரிட பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 148 தனியார் விதை விற்பனையாளர்களின் மூலம் கடந்த ஓராண்டில் மட்டும் 650டன் மக்காச்சோள விதைகளும், 2 டன் பருத்தி விதைகளும் வழங்கப்பட்டுள்ளது.

எனவே, விவசாயிகளின் தரமான பயிர்களுக்கு அடிப்படையாக அமைவது தராமான விதைகளே ஆகும். எனவே, தனியார் விதை விற்பனையாளர்கள் எப்போதும் தரமான, அதிக விளைச்சல் தரக்கூடிய விதைகளை கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு வழங்கவேண்டும், என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!