Father Periyar, MGR Memorial Day: In Perambalur, leaders wear garland
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் 44ஆவது நினைவு நாளான இன்று தந்தைப் பெரியார், எம்.ஜி.ஆர். 30ஆவது நினைவு நாளையொட்டி பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள சிலைகளுக்கு அதிமுக சார்பில் மாவட்ட செயலாளரும், குன்னம் எம்.எல்.ஏவுமான ஆர்.டி.ராமச்சந்திரன் தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது, பெரம்பலூர் எம்.எல்.ஏ தமிழ்ச்செல்வன் ஒன்றிய செயலாளர்கள் கர்ணன்(ஆலத்தூர்), சிவப்பிரகாசம் (வேப்பந்தட்டை), கிருஷ்ணசாமி (வேப்பூர்) உள்ளிட்ட கட்சியை சேர்ந்த அணி நிர்வாகிகள், கிளைக்கழக பிரதிநிதிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இது போன்று எம்.ஜி.ஆர் கழகத்தை சேர்ந்த கட்சியினர் உள்ளிட்டவர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பெரியார் தி.க, திமுகவினர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.