Folk artists petition the Collector’s Office for relief, playing instruments and dancing!

பெரம்பலூர் மாவட்டத்தில உள்ள தமிழ்நாடு தோழர் ஜீவா அம்பேத்கர் நாட்டுப்புற கலைஞர்கள் சங்கம் சார்பில், இன்று காலை கலெக்டர் அலுவலகம் முன்பு, கோரிக்களை வலியுறுத்தி இசைக்கருவிகளை இசைத்தும், நடனமாடியும் கோரிக்கை மனுவை கொடுத்தனர்.

அந்த மனுவில், தொடர்ந்து கலைஞர்களுக்கு, நலவாரியம் அட்டை, அடையாள அட்டை, ஓய்வூதியம், உள்ளிட்டவைகளை 2 ஆண்டுகளாக கேட்டும், எவ்வித நடவடிக்கையும் இல்லை. மேலும், தற்போது விதிக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக நடக்க இருந்த திருவிழாக்கள் தடை செய்யப்பட்டுள்ளதால், அந்த திருவிழாவில் கூத்து நிகழ்த்தி சம்பாதிக்கும் வாய்ப்பு கடந்த ஆண்டை போலவே, இந்த ஆண்டும் பறியோய்விட்டது. ஆகையால், பதிவு பெற்ற, பதிவு பெறாத அனைத்து மூத்த கலைஞர்களுக்கும், கொரோனா நிவராணமாக 10 ஆயிரம் வழங்க வேண்டும், அரசு விழிப்புணர்வு விளம்பர நிகழ்ச்சிகளுக்கு தங்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர். இதில் நூற்றுக்கும் மேற்ப்பட்ட கலைஞர்கள் வேடமணிந்து கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!