Following Virudhunagar.., in Perambalur, 100 day work program Rs. 34 lakh fraud; Officials complain; One is suspended!
தமிழகத்தில் 100 நாள் வேலைத் திட்டத்தில் நடைபெற்ற மோசடியால் 34 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், பணியை முறையாக கண்காணிக்கத் தவறிய அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ள நிலையில்,
100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் நடைபெற்ற மோசடிகள் குறித்து மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகத்தின் தணிக்கைக் குழு நடத்திய ஆய்வின் படி 2023-24 ஆம் நிதியாண்டில் நடைபெற்ற மொத்த மோசடியான 35 கோடி ரூபாயில், 34 கோடி ரூபாய் தமிழகத்தின் விருதுநகர் மாவட்டத்தில் மட்டுமே நடைபெற்றிருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகின. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஒன்றியத்தில் சுமார் 34 லட்ச ரூபாய் மோசடி நடந்ததை வெளிச்சத்திற்கு வந்ததையடுத்து, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் சம்பந்தபட்பட பணியாளரை பணியிடை நீக்கம் செய்து, அரும்பாவூர் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தி வருவதுடன் மோசடி செய்யப்பட்ட பணத்தை மீட்கும் நடவடிக்கைகளிலும் தீவிரமாக ஈடுபட்டுள்னர்.
100 நாள் வேலைத்திட்டத்தில் இறந்தவர்கள், காணமல் போனவர்கள், கிராமத்திலேயே இல்லாதவர்கள், வெளியூர்வாசிகள், வடமாநிலத்தவர்கள், வீட்டில் இருப்பவர்கள், தலைவர் மற்றும் செயலாளர்களுக்கு வேண்டப்பட்டவர்கள் என வேலைக்கு சம்பந்தமில்லாதவர்களின் பெயர்களை கணக்கு காட்டி மோசடி நடைபெறுவதாக அடிக்கடி ஏற்படும் புகார்களை அரசு அதிகாரிகள் அலட்சியமாக எதிர்கொள்வதே இது போன்ற மோசடிகள் அதிகரிக்க முக்கிய காரணம் என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
எனவே, 100 நாள் வேலைத் திட்டத்தில் போலியான கணக்குகளை காட்டி மோசடியில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, இனி வரும் காலங்களில் அத்திட்டத்தின் மீது கூடுதல் கவனம் செலுத்தி முறைகேடுகளை தவிர்ப்பதோடு தகுதியான பயனாளிகள் பயன்பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், பெரம்பலூர் மாவட்டத்தில் லாடபுரம் உள்ளிட்ட பல கிராமங்களில் வீடு கட்டும் திட்டத்தில் மோசடிகள் நடந்தும், நடவடிக்கைகள் பின்னடைவாக உள்ளது. மேலும், கோடி கணக்கில் ஊழல் செய்த ஒரு ஊராட்சியின் செயலாளரை பணி நீக்கம் செய்யாமல், அவரிடம் இருந்து கோடிக்கணக்கான பணத்தை பறிமுதல் செய்யாமல், அவர் சம்பளத்தில் இருந்து சொற்ப தொகையை பிடித்தும் செய்து வருகின்றனர். மீறி நடவடிக்கை எடுத்தால் உடந்தையாக இருந்த அதிகாரிகள் மாட்டிக் கொள்வார்கள் என காப்பாற்றி விட்டுள்ளனர்.
ஒரே ஊரில் தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு மேலாக அரசு விதிகளை மீறி பணிபுரிந்து வரும் அனைத்து ஊராட்சி செயலர்களை வேறு ஊர்களுக்கு பணிமாற்றம் உடனடியாக செய்ய வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.