Free Vaccine Camp for dogs near Namakkal: Tomorrow is happening
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் கால்நடை ஆஸ்பத்திரி வளாகத்தில் நாளை வெள்ளிக்கிழமை நாய்களுக்கு இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் டாக்டர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :
உலக வெறிநோய் தினத்தினை முன்னிட்டு நாய்களுக்கு இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் மற்றும் வெறிநோய் விழிப்புணர்வு கண்காட்சி இன்று (28ம் தேதி) வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 12மணி வரை ராசிபுரம் கால்நடை ஆஸ்பத்திரி வளாகத்தில் நடைபெறுகிறது.
முகாமை நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் டாக்டர் மோகன் துவக்கிவைக்கிறார். எனவே பொது மக்கள் இந்த வாய்ப்பினை தவறாமல் பயன்படுத்தி தங்களுடைய நாய்களுக்கு தடுப்பூசி அளித்து வெறிநோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளவேண்டும் என தெரிவித்துள்ளார்.