Free Specialty Kidney Testing Camp at Perambalur Arputha Hospital: More than 250 Benefited!
பெரம்பலூர் அற்புதா மருத்துவமனையில் இலவச சிறப்பு சிறுநீரக மருத்துவ பரிசோதனை முகாம், நிர்வாக இயக்குநர் டாக்டர் சாமுவேல் தேவகுமார் தொடங்கி வைத்தார். மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் ஸ்டெல்லா சாமுவேல் தலைமையில், சிறுநீரக மருத்துவ நிபுனர்கள் ரவி, ஜாபர், சந்தோஷ், சுரேஷ் ஆகியோர் நோயாளிகளுக்கு சிறுநீரக கற்கள், சிறுநீர் குழாய் கற்கள், நீர்ப்பை கற்கள், நீர்த்தாரையில் அடைப்பு, தசை வளர்சசி உள்ளதா என பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கி சிகிச்சை அளித்தனர்.
நோயாளிகளுக்கு எக்ஸ்ரே, ஸ்கேன், ரத்தபரிசோதனை ஆகியவை இலவசமாக செய்யப்பட்டு மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது. முகாமில் சிறுநீரக கற்களுக்கான அறுவை சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது. முகாமில் 250க்கு மேற்பட்ட நோயாளிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.