Free Training Camp in Namakkal on Integrated Pest and Disease Management in Coconut
நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தின் திட்ட தலைவர் டாக்டர் அகிலா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :
நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் வரும் 30ம் தேதி செவ்வாய் கிழமை காலை 9மணிக்கு தென்னையில் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் நிர்வாகம் என்றதலைப்பில் ஒரு நாள் இலவசப் பயிற்சி முகாம் நடைபெறுகிறது.
இப்பயிற்சி முகாமில் தென்னையின் சாகுபடி குறிப்புகள், நோய்கள் மற்றும் பூச்சிகள் தாக்குதல் அறிகுறிகள் கண்டறிந்து அதனைக் கட்டுபடுத்தும் முறைகள், இயற்கை, ராசாயான மற்றும் உயிரியல் முறையில் கட்டுபடுத்தும் மேலாண்மை முறைகள், ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் நிர்வாகம் பற்றிய தெளிவான விளக்கங்கள் அளிக்கப்படும்.
இதில் விவசாயிகள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். விருப்பமுள்ளவர்கள் நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்திற்கு நேரில் வந்தோ அல்லது தொலைபேசி மூலமாகவோ வரும் 30ம் தேதி காலை 9மணிக்குள் பெயரை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.
பயிற்சிக்கு பதிவு செய்வதில் நாமக்கல் மாவட்ட விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும் பயிற்சிக்கு வரும் விவசாயிகள் தங்களுடைய ஆதார் எண்னை கண்டிப்பாக பதிவு செய்யவேண்டும் என தெரிவித்துள்ளார்.