Free Training for TNPSC Group Exam: Lakshmi Nursing College Chairman Dr.Karunakaran!

டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுக்கு, இலவச பயிற்சி வகுப்பில் சேரலாம் என லட்சுமி நர்சிங் கல்லூரி தாளாளர் டாக்டர் கருணாகரன் அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது:

பெரம்பலூர் லட்சுமி மருத்துவமனையின் அங்கமான, லட்சுமி நர்சிங் கல்லூரி மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் இணைந்து, டிஎன்பிஎஸ் சி குரூப் தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களுக்கு இலவசமாக பயிற்சி வகுப்பை நடத்துகிறது. வகுப்புகள் வரும் 15ஆம் தேதி முதல் தொடர்ந்து 2 மாதம் நடக்கிறது. திங்கள் முதல் வெள்ளிக்கிழமைகளில் காலை 10 மணி முதல் 1 மணி வரையும், சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் முழுநேர வகுப்பும் நடத்தப்படுகிறது.

இந்த பயிற்சி வகுப்பில் போட்டித் தேர்வுகளுக்கு, பயிற்சி அளிக்கும் நன்கு அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களை கொண்டு பாடம் நடத்தப்படுகிறது. பயிற்சி வகுப்பில் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தேவையான புத்தகங்கள் மற்றும் வினா விடை புத்தகம் ஆகியவை குறைந்த கட்டணத்தில் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் உடனடியாக சேர்ந்து பயனடையவும், மேலும், விவரங்களுக்கு 96009-32463,94872-72675 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!