Free Training in Perambalur District Employment Office for Group 2: Collector Information
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேலைநாடும் மாணவ – மாணவிகளுக்கு அவ்வப்போது வெளியிடப்படும் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
இப்பயிற்சி வகுப்புகள் மூலம் பயின்று பலரும் போட்டித் தோ;வுகளில் வெற்றி பெற்று அரசுப்பணிகளில் சேர்ந்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தொகுதி 2 வெளியிடப்பட்டுள்ள TNPSC GROUP II தேர்விற்கான பல்வேறு பதவிகளை உள்ளடக்கிய 1199 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேற்கண்ட தேர்வில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மாணவ – மாணவியர்கள் பங்கு கொண்டு வெற்றி பெறும் நோக்கில் TNPSC GROUP II தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு இன்று முதல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக பயிற்சி அரங்கில் நடத்தப்பட்டு வருகிறது,
பெரம்பலூர் மாவட்டத்தில் இளைஞர்கள் – இளம் பெண்கள் ஆர்வமுள்ளவர்கள் இந்த வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும், இப்பயிற்சி வகுப்பில் தொடர்ந்து பயிலுபவர்களுக்கு இலவச பயிற்சி கையேடும் வழங்கப்பட உள்ளது.
அவ்வபோது மாதிரி தேர்வுகளும் நடத்தப்பட உள்ளன. இப்பயிற்சி வகுப்பில் சேர விரும்புவோர் கடவுச்சீட்டு அளவு புகைப்படம், தேர்விற்கு விண்ணப்பித்த ஆன்-லைன் பிரின்ட் அவுட் நகல் ஆகியவற்றுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்புகொள்ளலாம், என ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.